விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தற்போது ஆறாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய பிறகு தற்போது 13 போட்டியாளர்களோடு ஒளிபரப்பாகி வருகிறது.


 



 


ஷாக் கொடுத்த மைனா :
  
சண்டை, சச்சரவு, வாய் தகராறு என சூடுபிடிக்கும் இந்த சீசன் போட்டியாளர்களின் ஒருவரான மணிகண்டன், மைனா நந்தினியின் ஒரு நாள் சம்பளம் என்ன என்பதை பற்றி தனலட்சுமியிடம் உளறிய விஷயம் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. மைனா வாங்குற சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி வேலை செய்யவே இல்லை என தற்செயலாக தனலட்சுமியிடம் உளற சட்டென கேள்வியை மணிகண்டன் பக்கம் திருப்பிய தனலட்சுமி, மைனா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என கேட்டுள்ளார். ஒரு நாள் சம்பளம் மட்டுமே 1.5 லட்சம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 90 லட்சம் கிடைக்கும் என்றதும் வாயை பிளந்துள்ளார் தனலட்சுமி. இந்த தகவல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 







எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். கடந்த வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். தற்போது மீதம் உள்ள 13 போட்டியாளர்கள் களத்தில் முழுவீச்சில் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். 


அந்த வகையில் 50 நாட்களையும் கடந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.