பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் களம் புகுந்த நொடியில் இருந்து சூடுபிடித்து விட்டது பிக்பாஸ் சீசன் 6 . முதல்நாளே விக்ரமன், நிவா, குயின்ஸி, ஜனனி ஆகியோர் போட்டியாளர்களால் ஓட்டளிக்கப்பட்டு, வீட்டின் வெளியே அனுப்பப்பட்டனர். வளாகத்தில் உறங்கி வரும் அவர்கள், உள்ளே வர தற்போது வரை அனுமதியில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் நேரடியாக நாமினேஷனிலும் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் விதிகளை மீறி இலங்கை செய்திவாசப்படும் தொகுப்பாளினியுமான ஜனனி பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்றார்.
அங்கு தன்னுடைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில், தன்னுடைய அலங்கார பொருட்களை தேடிய அவர், நீண்ட நேரம் அவை கிடைக்காததால், கவலை கொண்டார். பின்னர் அருகில் இருந்த போட்டியாளர்களிடம் சில அலங்காரப் பொருட்களை கேட்டார். அதன் பின் பாத்ரூம் வளாகத்திற்கு வந்த அவர், பிக்பாஸ் கேமரா முன், புலம்ப ஆரம்பித்தார். இதோ அந்த புலம்பல்..
‛‛சோப்பு, ஃபேஷ் வாஷ், தோடு, லிப்ஸ்டிக், லைனர், மஸ்காரா எனக்கு எல்லாமே வேணும். நீங்க தரவில்லை என்றால், நான் இந்த ட்ரெஸ் மாத்தவே மாட்டேன். எனக்கு என்னோட பொருட்களை கொடுங்க. இங்கே பாருங்க, தலை சீவ கூட என்னிடம் சீப்பு இல்லை. தலை சீவாமல் இப்படியா நிற்கிறேன் நான். தயவு செய்து கொடுத்துடுங்க ப்ளீஸ்... நேற்றிலிருந்து பாருங்க. ஃபேஸ்வாஷ் போடாமல் என் முகத்தை பாருங்க... என் முகம் மோசமாக உள்ளது. எல்லாத்தையும் கொடுங்க என்னிடம். வேறு என்ன நான் சொல்றது. என்னோட எல்லா மோதிரமும் அதில் இருக்கு. நான் ஆடைக்கு ஏற்ற மோதிரம் போடுவேன். என்னோட எல்லா பொருளும், எல்லாமே அதில் தான் இருக்கு. தயவு செய்து அதை கொடுங்க...’’
என்று கொஞ்சும் இலங்கை தமிழில் கொஞ்சி கொஞ்சி கோரிக்கை வைத்தார். பொருட்களை தந்தால் தான் ஆடையை அணிவேன் என்று ஜனனி கூறியிருப்பதால், இந்த விவகாரம் சீரியஸாகவே நகரும் என தெரிகிறது.தண்டனை பெற்ற நான்கு போட்டியாளர்களுக்கும் தண்டனை முடியும் வரை வீட்டிற்குள் வராமல் இருக்கவே பிக்பாஸ் இந்த யுக்தியை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜனனியின் பொருட்கள் வந்ததா? அவரது தர்ணா கைவிடப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்