Bigg Boss 6 Tamil Public Contestants: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம் பொதுமக்கள் விண்ணப்பித்த நிலையில் 2 பேர் மட்டுமே போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர்.






இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார். அதன்படி நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , டான்ஸ் மாஸ்டர் சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, நடிகை ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன்,விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 






இந்நிலையில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமானிய மக்களும் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறீர்கள் என்கிற காரணத்தை கூறி வீடியோ பதிவு செய்யும் ஒரு போட்டியும் வைக்கப்பட்ட நிலையில் 20 ஆயிரம் பொதுமக்கள் விண்ணப்பித்ததாக தெரிய வந்துள்ளது. இதில் 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


ஒன்று திருநங்கை ஷிவின் கணேசன்  மற்றும் டிக்டாக் புகழ் தனலட்சுமி ஆகியோராவர். இவர்களில் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியாக பணிபுரியும் திருநங்கை ஷிவின் கணேசன் கடந்த சீசனில் முதல் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்றிருந்ததைப் போல இம்முறை கலந்து கொண்டுள்ளார். மாடலாக தான் ஜொலிக்க பிக்பாஸ் நிகழ்ச்சி உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


மற்றொருவரான ஈரோடு மாவட்டம் பவானியைச் பிரபல டிக்டாக்கரான சுகி தேவி என்கிற தனலட்சுமி சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம் இருந்த நிலையில் டிக்டாக் தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமானார். டிக்டாக் தடைக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யத் தொடங்கி அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமே  4 லட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.