Bigg Boss Tamil Season 6 Episode 4: பிக்பாஸ் சீசனின் 4 ஆவது எபிசோடில் நடந்த களேபரங்களை புட்டு புட்டு வைக்கிறது இந்தத்தொகுப்பு! ஆரம்பிக்கலாங்களா...!
சத்தமாக கத்தி டெசிபலை ஏற்றும் டாஸ்க்கில் அரங்கேறிய மோதலோடு தொடங்கியது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி.. விக்ரமன், உங்களுக்கு எக்ஸ்ட்ராவா ஒரு சான்ஸ் கிடைச்சதுல்ல.. அதே மாதிரி எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்று கேட்டதும்தான் மிச்சம்... வரிந்து கட்டி வந்த ஜிபி முத்து.. ச்சே விளையாட்டுக்கே மதிப்பில்லாம போச்சு... இது மகா தப்புங்க... என்று சண்டைக்கு வந்துவிட்டார்... தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடிக்க.. இது சரிப்படாது என்று உள்ளே வந்த பிக்பாஸ் எல்லோரும் போய் உட்காருங்கய்யா.. என்றார்.
பெண்கள் பிரிவில் இருந்து 4 பேர் கத்துறதுக்கு வாங்கப்பா என்று கூப்பிட.. முதல் ஆளாக வந்த தனலட்சுமி முதல் ரக்ஷிதா வரை அனைவரும் தொண்டை கிழிய கத்தினார்கள்... இறுதியில் அம்மணி ரக்ஷிதா தனது தொண்டையால் பிக்பாஸ் செட்டை அலறவிட டெசிபல் 2.3 க்கு எகிறியது... இறுதியில் ஆண்கள் பிரிவில் ஜிபி முத்துவும், பெண்கள் பிரிவில் ரக்ஷிதாவும் வின்னர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆக மொத்தம் இரண்டு டீமுக்கு இரண்டு ஸ்டார்..
ரிவியூ டைம் வர ஒவ்வொரு டீமாக மேடையேற்றப்பட்டார்கள்..
முதலில் கதிரவனின் க்ளீனிங் கிளப் மேடையேற்றப்பட்டது. அங்கேயும், இங்கேயுமாய் குறைகளை சொல்லி இறுதியில் இதர கிளப் ஓனர்கள் 3 ஸ்டார்களை அவர்களுக்கு கொடுத்தார்கள். அடுத்ததாக ஷிவின் தலைமையிலான கிச்சன் கிளப் மேடையேற்றப்பட்டது.
முதல் ஆளாக குறையை முன் வைத்த ஜனனி, வெல்கம் ட்ரிங்கையாவது கொஞ்சம் முனனாடி கொடுத்திருக்கலாம்..சாப்பாடு லேட்ட ஆனாதால எம்புட்டு பசி தெரியுமா என கொளுத்தி போட, பொங்கி எழுந்த மகேஷ்வரி.. ஆங்.. அமுதவாணன், சாந்தி ஊட்டி உட்டாத்தான் சாப்பிடுவேன்னு சொன்னாரு.. அதான் டிலே ஆச்சு என்று பேச.. இந்த வரான் என்ற ராபர்ட் .. குழம்பு பிடிக்கல என்று சொன்னார்.
தொடர்ந்து அவர்களுக்கு 3 ஸ்டார் கொடுக்கப்பட்டது. அடுத்தாக வந்த ஜனனி தலைமையிலான வெசல் டீமுக்கு 4 ஸ்டார் கிடைத்தது. அதற்கடித்தபடியாக வந்த அமுதவாணனின் பாத்ரூம் டீம் மேடை ஏறியது.. பாத்ரூம் க்ளின் பண்றது சாதரண விஷயமல்ல.. நீங்க நல்லா பண்ணீங்க இதர டீம்கள் சொல்ல.. அவர்களுக்கும் 4 ஸ்டார் கொடுக்கப்பட்டது.
ஒருவரை ஸ்வாப் செய்யும் டாஸ்க்கில் விக்ரமன் ஏடிகேவை பரிந்துரை செய்ய, நிவா ராமை நாமினேட் செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து குயின்ஸி அஸிமை குறி வைக்க, ஜனனி ஆயிஷா பாத்திரம் கழுவும் போது திடீரென்று விலகி நின்றதை சொல்லி அம்பை அவர் மீது பாய்ச்சினார்.. உடனே பொங்கி எழுந்த ஆயிஷா எல்லாரும் என்னை தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நான் விளக்குறேன் என் முன்வர... போட்டியாளர்கள் மொய்த்ததில் இறுதியில் சாரி கேட்டதோடு அழவும் செய்து விட்டார்.
கோபத்தோடு கண்ணாடி முன் நின்ற ஆயுஷாவிடம்.. ஜனனி, சரி நீ சொன்ன விளக்கத்துக்கு மண்டைய ஆமான்னு ஆட்டணுமா சொல்லு சரி ஆட்டுறேன் என்று சொல்ல... தயவு செய்து நான் சொல்றது தயவு செய்து ரியாக்ஷன் கொடுக்கணும் என்று கரராக சொன்னார் ஆயிஷா. ஜனனி அதை கத்தாமல் சொல்ல வேண்டும் இல்லையென்றால் அதை கேட்க மாட்டேன் என்று அசால்ட்டாக ஹேண்டில் செய்தது தூள் ரகமாக இருந்தது. ஆனால் இதில் ஆயிஷா எமோஷனல் கேம் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வந்தது.
அசல் குயின்ஸியை வா போ என்று பேச... கடுப்பான குயின்ஸி மரியாதை மரியாதை என்று அதட்ட... அசல் சாரி என்று பொத்திக்கொண்டு போவார் என்று பார்த்தால்.. அப்போது நேற்று என்னை பைத்தியம் என்று சொன்னாய் என்று கேட்டார்... இதைக்கேட்டு கடுப்பான குயின்ஸி பிரஷ்ஷை எடுத்து தேய்த்து விடுவேன் என்று சொல்ல மோதல் வெடிக்கும் என்று பார்த்தால், இறுதியில் இருவரும் அக்கா- தம்பி என பாசம் மோடுக்கு சென்று விட்டார்கள்.
ஜனனி,தனலட்சுமி, ஆயிஷா ஷிவினின் பாலினத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்க, அதைப்பற்றி அவரிடமே கேட்கலாம் என்று ஆயிஷா சொன்னார்.. இல்லை இல்லை வேண்டாம்.. தப்பாக எடுத்துக்கொள்வார் என்று மீத இருவரும் சொல்ல... விவாதத்தின் இறுதியில் நானும் அதைத்தானே சொல்றேன்.. அவரிடம் கேட்க வேண்டாம் என்று ஆயிஷா சொல்லும் போது.. எப்படி தோசைக்கல்லை திருப்புது பாரேன் என்று தோன்றியது.
மதிய சாப்பாடு ரெடியாகி கொண்டிருக்க, இப்ப வைக்கிற சாம்பார்தான் மதியத்துக்கும் என்றார் மகேஷ்வரி.. இதை கேட்டு கொதித்து போன தனலட்சுமி என்னது நைட்டுக்கும் இதா என்று கொந்தளிக்க... லூசு மாதிரி பேசாத என்று வார்த்தையை விட்டார் மகேஷ்வரி.. அதைக்கேட்டு தனம் லூசு என்று சண்டைக்கு போக.. சண்டையின் இறுதியில் ஆமா இதில் யாரு லூசு என்ற கேள்வி நமக்கும் வந்தது.
இதற்கிடையில் வந்த ஜிபி முத்து எனக்கு சாம்பாரில் முருங்கைக்காய் கண்டிப்பா வேணும் என்று சொல்ல.. குடும்பம் கலகல என்றானது. பார்க் தி பால் டாஸ்க்கில் (பலகையில் இருக்கும் ஓட்டைகளை கடந்து பாலை பலகையின் இறுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்) மணிகண்டன் வின்னரானார். அத்துடன் இன்றைய நிகழ்ச்சி உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது.