Bigg Boss Tamil 5 winner: அன்றே கணித்தாரா தாமரை...? பிக்பாஸ் 5 டைட்டைல் வின்னர் இவர்தான்...?

தாமரை வெளியே போகும்போது ”நீ என் மூத்த பிள்ளை... டைட்டில் வின் பன்னிட்டு வா” என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றிருப்பார். அது நிஜமாகி இருப்பதாக தெரிகிறது. கடைசி எபிசோடில் உண்மை நிலவரம் தெரியவரும்.

Continues below advertisement

Bigg Boss 5 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.

Continues below advertisement

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் கடைசி எலிமினேஷன் இதுதான் என்பதால், இதில் தாமரைச் செல்வி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. சவாலான போட்டியாளரான அவர், இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 5 போட்டியாளர்கள்: ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்

இந்நிலையில், பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டின் கடைசி வார டாஸ்க்கின்போது பேசிய ராஜூ, “இந்த வாய்ப்பு எனக்கு வாழ்க்கையா மாறப்போகுது. உங்க வீட்ல இப்படி ஒரு பையன் இருக்கனும்னு நெனச்சிருந்தீங்கனா அதுவே எனக்கு சந்தோஷம்” என நெகிழ்ச்சியாகப் பேசி வாக்கு சேகரித்தார். 
அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே ராஜூவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் பெரும் ஆதரவுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியவர் டைட்டிலை வென்வதில் ஆச்சர்யமில்லை. மேலும், தாமரை வெளியே போகும்போது ”நீ என் மூத்த பிள்ளை... டைட்டில் வின் பன்னிட்டு வா” என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றிருப்பார். அது நிஜமாகி இருப்பதாக தெரிகிறது. கடைசி எபிசோடில் உண்மை நிலவரம் தெரியவரும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement