Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள விசித்ராவும், கூல் சுரேஷூன் தங்கள் பிள்ளைகள் சரியாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், யுகேந்திரன், நடிகை விசித்ரா, பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மாயகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர். 


முதல் வாரத்தில் போட்டியாளர்களிடையே பேசும்போது அடிப்படை கல்வியின் அவசியத்தை பேசிய விசித்ரா, ஜோவிகா பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதனால் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை வெடித்தது. அடிப்படை கல்வி குறித்து பேசும்போது தனக்கு விருப்பம் இல்லாததால் படிக்கவில்லை என்றும், அதையே குறிப்பிட்டு விசித்ரா பேசுவதாகவும் ஜோவிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரப்பை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் இருவரது தவறுகள் மற்றும் அவர்களின் பார்வையில் தோன்றும் நீதியை சுட்டிக்காட்டி கமல் பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் படிப்பு குறித்து கூல்சுரேஷ், விஜய், பிரதீப் என ஆண்கள் பேசி கொள்வதும் அப்போது விசித்ரா வருவதும் போன்ற காட்சி வெளியாகியுள்ளது. அதில் தனது மகன்களிடன் பேசிய கூல் சுரேஷ், தான் கஷ்டப்பட்டு இருவரையும் பள்ளிக்கு அனுப்பவதாகவும், தன்னால் படிக்க முடியவில்லை நீங்களாவது படியுங்கள், உங்களால் தான் இத்தனை கஷ்டப்படுகிறேன் என பேசியுள்ளார். விசித்ராவும் படிக்க வேண்டும் என கூல் சுரேஷின் பிள்ளைகள் மற்றும் தனது மகனுக்கு அட்வைஸ் செய்துள்ளார். 






நடப்பு  சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ராம் என பலரும் பங்கேற்றுள்ளனர்.  இந்த முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: தொக்காக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குறும்படம் போட தயாராகும் கமல்.. என்ன நடந்தது?


Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் புது ரூல்ஸ்.. வசமாக மாட்டிய முக்கிய போட்டியாளர்..கமல் எச்சரிக்கை..!