Bigg Boss Tamil 9: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்று தொடங்கியது. இதில் ரட்சகன் படத்தை இயக்கிய ப்ரவீன்காந்தி, இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர், அரோரா, நடிகர்கள் சபரி, ராப் பாடகர் எஃப் ஜே உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
ப்ரவீன்காந்தி - திவாகர்:
இந்த நிகழ்ச்சியில் அனைவரது மத்தியிலும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் காரசாரமான விவாதங்களில் பங்கேற்று வந்தவர் ப்ரவீன்காந்தி. இன்று பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
தெறித்து ஓடிய ப்ரவீன்காந்தி:
பெரும்பாலான போட்டியாளர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தனியாக நின்று கொண்டிருந்த ப்ரவீன்காந்தியிடம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சென்று பேசினார். அப்போது, இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்தவர்கள்.
நான் ஒரு வருடத்தில் இந்த பாப்புலரிட்டியை அடைந்துள்ளேன். பேசிக்கல்லி நான் ஒரு டாக்டர். இதுக்காக என்று பேசிக்கொண்டிருந்தபோதே இயக்குனர் ப்ரவீன்காந்தி அந்த இடத்தில் இருந்து குட்.. குட்.. குட் என்று கூறிக்கொண்டே நகரத்தொடங்கினர்.
ஆனாலும், விடாமல் டாக்டர் திவாகர் அவரிடம் பேசிக்கொண்டே பின்னால் சென்றார். ஆனால், ப்ரவீன்காந்தி அவர் பேசுவதை ஏதும் கேட்காமல் குட் குட் குட் என்று கூறிக்கொண்டே அருகில் உள்ள அறையை பார்ப்பதற்குச் சென்றுவிட்டார். ப்ரவீன்காந்தி தன்னிடம் பேசாமல் புறக்கணிப்பதை புரிந்து கொண்ட திவாகர் அப்படியே அமைதியாக ஒதுங்கிவிட்டார்.
அடுத்தடுத்து காத்திருக்கும் கன்டென்கள்:
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபர்களிடம் விடாமல் பேசிக்கொண்டே இருக்கும் திவாகரை ப்ரவீன்காந்தி புறக்கணித்துச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் விதவிதமான போட்டிகள், வாதங்கள் அரங்கேறும் என்பதால் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரவீன்காந்தி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உலா வந்தவர். நாகர்ஜுனா நடித்துள்ள ரட்சகன் படத்தை இயக்கியுள்ளார். ஜோடி, ஸ்டார், துள்ளல், புலிப்பார்வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். துள்ளல் படத்தில் மட்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ரட்சகன் படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவானது. வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறாவிட்டாலும் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.