Bigg Boss Tamil Season 9: தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் ஆகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்று தொடங்கியது.
வாட்டர்மெலன் ஸ்டாரும் - பலூன் அக்காவும்:
இந்த சீசனின் முதல் போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலம் மருத்துவர் திவாகர் உள்ளே சென்றார். வாட்டர்மெலன் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இவர் யூ டியூப் பேட்டிகள் மூலமாக மேலும் பிரபலமானார்.
இவர் போட்டியாளராக உள்ளே சென்ற பிறகு இரண்டாவது போட்டியாளராக இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அரோரா சின்க்ளர் உள்ளே சென்றார். மூன்றாவது போட்டியாளர் உள்ளே வரும் வரை இவர்கள் இருவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் புதிய போட்டியாளர் அரோரா சின்க்ளரிடம் அறிமுகமானார்.
என்ன செய்தார்?
அரோரா சின்க்ளரிடம் அவரது பெயரையும், என்ன தொழில் செய்கிறார்? என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர், அவரிடம் தனது பெயர் திவாகர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் வாட்டர்மெலன் ஸ்டார் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர், அரோரா மற்றும் 3வது போட்டியாளராக எஃப்.ஜே வந்த பிறகு 3 பேரும் இணைந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது, அரோரா சிறைக் கூண்டை உள்ளே சென்று பார்த்தபோது திவாகரும் உள்ளே சென்று சுற்றிப் பார்த்தார்.
மேலும், முதல் ஆளாக உள்ளே சென்றவுடன் வீட்டைச் சுற்றிப் பார்த்து உற்சாகத்தில் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலமாக கவர்ச்சிகரமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்த அரோரா-வை ரசிகர்கள் பலூன் அக்கா என்று அழைக்கத் தொடங்கினர். அவரும் தனது அடையாளமாக அவ்வாறு கூறத் தொடங்கினார்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அரோராவைப் பார்த்து உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது? என்று கூறிய நிலையில், எஃப் ஜே அவரிடம் அந்த பெண்ணிற்கு உங்கள் பேத்தி வயது இருக்கும் என்று கூறினார். இதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது.