பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 வாரங்களில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இன்று 78ஆவது நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில், சென்ற வாரத்தில் மட்டும் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் என இரு போட்டியாளர்கள் எவிக்டாகி வீட்டை விட்டு வெளியேறினர்.


மேலும் சென்ற வீக் எண்ட் எபிசோட்களில் சரமாரியாக கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்க்கு அறிவுரை வழங்கிய நிலையில், இந்த வாரம் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஷ்ணு, பூர்ணிமா, ரவீனா, மணி, விசித்ரா, மாயா, தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, விஜய் வர்மா ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில்,  இன்றைய 78ஆவது நாளுக்கான ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.  “ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து இன்று ஸ்மால் பாஸ் ஹவுஸூக்கு போகக்கூடிய 6 பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்” என பிக்பாஸ் தெரிவிக்க, மாயா - பூர்ணிமா குழுவாக சேர்ந்து விளையாடுவதாக சக ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், “மாயா - பூர்ணிமா ஒன்றாக இருந்தால் அவர்கள் இருவரும் ஒரு தனி உலகத்தில் இருப்பது போல் விளையாடுவார்கள்” என விசித்ரா தெரிவிக்க, மாயா கோபப்பட்டு “திருப்பி திருப்பி இதையே சொல்லாதீங்க” எனக் கூறுகிறார். மேலும் “நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது உங்க கேமை பாதிக்குதா” என மாயா கேட்டு விவாதம் செய்துவிட்டு,  மாயா பூர்ணிமாவிடம் தன்னை இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு செல்கிறார்.


தொடர்ந்து பூர்ணிமா சென்று “நீங்க இடைவெளி கடைபிடிக்க விரும்பறீங்களா” எனக் கேட்க, இனிமே என்னிடம் நீங்க பேசாதீங்க” என மாயா கூறும் வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 


 



தனியாக கேம் விளையாடுவது, ஃபேவரிட்டிசம் ஆகியவை பற்றி வாராவாரம் பேசிக் கொண்டிருந்தாலும் சென்ற வாரம் ரவீனாவை பிக்பாஸ் வீட்டின் ஸ்பாய்லர் என்றும், அவரவர் கேமை விளையாடாமல் இப்படி விளையாடினால் திறமையானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கமல் கடுமையாகப் பேசினார்.


மற்றொரு புறம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ற வாரத்தைப் போல் இந்த வாரமும் இரண்டு எவிக்‌ஷன்கள் இருக்கலாம்.


மாயா - பூர்ணிமாவின் கேம் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னதாக பூர்ணிமாவின் அப்பா இது பற்றி தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்க்காணலில் பேசியிருந்தார்.


"பூர்ணிமாவுக்கு மாயாவிடம் ரொம்ப அதிகமாக நட்பு உள்ளது. அதேபோல் அர்ச்சனா, மாயாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பூர்ணிமா இரட்டை அர்த்தத்துடன் பேசுவது தவறு தான். அதை பூர்ணிமா மாற்றிக் கொள்வார்.


என் வீட்டை போல தான் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். என் மகளை பேசுவதை போல் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களை பேசினால் சங்கடம் ஏற்படும். அதை உணர்ந்து தரம் குறைந்த விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்கலாம்" எனக் கூறியுள்ளார்.