பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய 68ஆவது நாளில் இந்த சீசனின் கோல்ட் ஸ்டார்களுக்கான கடைசி டாஸ்க் நடைபெற்றது. கடைசி கோல்ட் ஸ்டார் டாஸ்க் என்பதால் இதில் வெற்றிபெறுபவர்கள் 5 கோல்ட் ஸ்டார்கள் வாங்குவார்கள் என பிக்பாஸ் ஸ்வீட் அறிவிப்பினை வெளியிட போட்டியாளர்கள் பரபரப்புக்குள்ளாகினர்!


அமைதியாக வெளியேறிய மாயா, நிக்சன்


தான் ஏன் இந்த ஸ்டார்களை கைப்பற்ற உகந்தவர் என வாக்குவாதம் செய்து பிற போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டும் என, வார்த்தைப் போர் விளையாட்டை பிக்பாஸ் டாஸ்க்காக கொடுக்க, பூர்ணிமாவின் கண்ணீரால் பிக்பாஸ் வீடு வெள்ளக்காடானது.




எங்கே தன்னை ரவுண்டு கட்டி அட்டாக் செய்யத் தொடங்கி விடுவார்களோ என டாஸ்க் தொடங்கும் முன்பே பூர்ணி அழ, அவரை தோழி மாயா ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்ததுடன், தான் முதல் ஆளாக இந்த டாஸ்க்கில் இருந்து பின்வாங்கவும் செய்தார்.


அவரைத் தொடர்ந்து சொருகிடுவேன் எனும் தாறுமாறாகப் பேசி லைம்லைட்டில் இருக்கும் நிக்சன் இதுக்கு மேல இந்த வாரம் பிரச்னை வேண்டாம் என அமைதியாக வெளியேற, மீதி இருக்கும் கண்டெஸ்டண்ட்டுகள் இடையே வார்த்தைப் போர் சூடுபிடித்தது. கூல் சுரேஷூம் இவர்களை அடுத்து வெறியேறினார்.


விசித்ரா Vs விஷ்ணு


விசித்ராவும் விஷ்ணுவும் முதலில் டார்கெட் செய்யப்பட விஜய் வர்மா விஷ்ணு, பூர்ணிமா பற்றி தன்னிடம் இரண்டாம் வாரத்தில் சொல்லியவற்றை சபையில் போட்டுடைத்து விஷ்ணு தகுதியானவர் அல்ல என வாதாடினார். இவற்றையெல்லாம் கேட்ட பூர்ணிமா கண்ணீரின் விளிம்பில் வாய் பேச முடியாமல் நின்றார்.


தொடர்ந்து வாக்குவாதம் அனல் பறக்க, விசித்ரா அங்கிருந்த இளம் கண்டெஸ்டண்ட்டுகளுக்கு செம டஃப் கொடுத்து கேம் விளையாடினார். ஆனால் பூர்ணிமா தன்னுடைய மாஸ்டர் மைண்ட் ஆட்டத்தால் எல்லா ஹார்ட் ப்ரேக்குகளையும் தாண்டியும் விஷ்ணுவுக்கு ஆதரவாக மூவ் செய்து விசித்ராவை வெளியேற்றினார்.


இதனை அடுத்து அர்ச்சனா - தினேஷ் - மணி குழு திட்டமிட்டு பூர்ணிமா, விக்ரம் இருவரையும் வெளியேற்ற முயற்சி செய்ய, கேம் சேஞ்சராக மாறி ரவீணா ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். குழந்தைத்தனம் பொங்க  வழக்கம்போல் பேசி விவரமாக தினேஷை வெளியேற்றி செம ட்விஸ்ட் வைத்தார் ரவீணா.


அர்ச்சனாவுக்கு க்ளாஸ் எடுத்த விஜய் வர்மா






அவரைத் தொடர்ந்து அர்ச்சனாவின் மேல் ஃபோகஸ் குவிய, “ஒருவரைப் பற்றி குத்தி குத்தி பேசாதீங்க.. அவங்க வீக்னஸை தெரிஞ்சிட்டு வந்து கேம் விளையாடாதீங்க” என கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல் விஜய் வர்மா பேச, அதிசயமாக வாய் பேசாமல் அர்ச்சனா ஆட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.


அவரைத் தொடர்ந்து விஷ்ணு, மணி, ரவீணா என எல்லாரும் சடசடவென வெளியேற, விக்ரம் - பூர்ணி - விஜய் என மும்முனைப் போட்டி நிலவியது. இதில் பூர்ணி இருவரது ஓட்டுகளையும் பெற்று வெளியேற, தன் மாஸ்டர்மைண்ட் ஆட்டத்தைத் தொடர்ந்த விஜய் வர்மா, “இந்த ஸ்டார் உங்களுக்குத் தேவையில்ல.. ஸ்டார் இல்லாமலேயே நான் விளையாடுவேன்னு நீங்க ப்ரூவ் பண்ண வேண்டிய நேரமிது” என விக்ரமிடம் வாதிட்டார்.


5 ஸ்டார்களைக் கைப்பற்றிய விக்ரம்




இந்த விளையாட்டின் தொடக்கத்தில் இருந்து பெரிதாகப் பேசாத விக்ரமோ “நான் பத்து வாரம் இருந்துட்டேன்.. நான் இந்த ஸ்டாருக்கு மிகவும் தகுதியான ஆள்” என தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.


இப்படியாக விவாதம் செல்ல மனமிறங்கிய விஜய் வர்மா, விக்ரமின் கைகளில் 5 ஸ்டார்களையும் ஒப்படைத்து விட்டு வாழ்த்தி வெளியேறினார். பேச வேண்டிய இடத்தில் சரியாகப் பேசும் விஜய் வர்மா இந்தச் சுற்றில் இறுதிவரை வருவார் என ரசிகர்கள் கணித்திருந்தாலும், விக்ரமுக்கு அதுவும் ஒற்றைக்கு ஒற்றை ஆளாக நின்று அவர் விட்டுக் கொடுத்தது ‘அட’ சொல்ல வைத்து பிக்பாஸ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது.


விக்ரமின் உற்ற தோழர்களான மாயா - பூர்ணி கூட விக்ரம் வெல்லுவார் எனக் கணிக்காத நிலையில், விஜய் வர்மா சரியான இடத்தில் பேசி, வலுவான ஆட்டக்காரர்களை வெளியேற்றி ட்விஸ்ட் வைத்து, லைக்ஸ் அள்ளியுள்ளார்.