பிக்பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil 7) அதன் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 90 நாள்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் நிக்சன் - ரவீனா என 2 போட்டியாளர்கள் எவிக்டாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஐஷூ - நிக்சன்


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ - நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ஐஷூ - நிக்சன் உடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டு சென்ற காதல் டிராக் பெரும் விமர்சனங்களைப் பெற்றது. 40 நாள்களுக்கு மேல் இருந்தும் காதல் டிராக் தவிர்ந்து பிக்பாஸ் வீட்டில் சோபிக்காதது பிக்பாஸ் ரசிகர்களையும் அவரது பெற்றோரையும் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.


ஐஷூ எவிக்டான அடுத்த வாரமே நிக்சனும் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவற்றுக்கு மாறாக கொஞ்சம் கொஞ்சமாக தனித்து வெளியே தெரியத் தொடங்கி நிக்சன் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது 90 நாள்களுக்குப் பின் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடையும் சூழலில் இந்த வாரம் நிக்சன் எவிக்டாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐஷூ அப்பாவின் பதிவு


இந்நிலையில் நிக்சன் எவிக்‌ஷனை கொண்டாடும் விதமாக ஐஷூவின் அப்பா அஷ்ரஃப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே ஐஷூவின் பெற்றோர் நிக்சன் தான் தங்கள் மகளின் பிக்பாஸ் கேமை ஸ்பாயில் செய்ததாக கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. ஒரு படி மேலே போய், ஐஷூவை வெளியேற்றும்படி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சென்று ஐஷூவின் பெற்றோர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் ஸ்பைடர் படத்தில் பிறர் அழுவதைப் பார்த்து, கேட்டு ரசிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஐஷூவின் அப்பா தற்போது பகிர்ந்துள்ளார்.




நிக்சன் எவிக்‌ஷன் செய்தி வெளியான பின் அவர் இவ்வாறு ஸ்டோரியில் பகிர்ந்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.