Bigg Boss Tamil:  விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கப்பை வெல்வதற்கான டாஸ்குகள் வைக்கப்பட்டன. 


கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். அதில், 10 பாயிண்ட்டுகள் பெற்று, விஷ்ணு முன்னிலையில் உள்ளார்.  7 பாயிண்ட்டுகளை பெற்று ரவீணாவும், 6 பாயிண்ட்டுகளை பெற்று மணியும்  உள்ளனர்.  4 பாயிண்ட்டுகள் பெற்று நிக்சன், பூர்ணிமா, மாயா ஆகியோர் உள்ளனர். 


மேலும், 3 பாயிண்ட்டுகளில் கடைசி இடத்தில் உள்ளார் விசித்ரா. எனவே, டிக்கெட் டூ ஃபினாலேக்கு நேரடியாக விஷ்ணு செல்லவிருக்கிறார்.  இதற்கிடையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, விஷ்ணு, விஜய், வர்மா, ரவீணா ஆகியோர் உள்ளனர். 



இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் நிக்சன் மற்றும் விஜய் வர்மா ஏமாற்று வேலை செய்ததை கமல்ஹாசன் கண்டிக்கிறார். புரோமோவில், “அர்ச்சனா கார்டில் எக்ஸ் ஷேப்பில் மார்க் வைத்ததாக கூறுகிறார். அந்த மார்க் யாரு பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க? நிக்சன் நீங்க கார்டை எதாவது மடித்து செய்தீர்களா.. நீங்கள் ஜெயித்ததற்கு நான் தான் காரணம் என்றீர்களே? பார்க்கறவர்களுக்கு பல சந்தேகம் வருகிறது” என நிக்சனை பார்த்து கேட்கிறார். 





24 மணி நேர காட்சிகளில் நிக்சன் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கார்டில் மடக்கி வைத்தும், பிறகு அதில் சுரண்டி வைத்தும் அடையாளப்படுத்தி இருந்தார். அதைத் தெரிந்து கொண்டே விஜய் வர்மா நிக்சனுக்கு அந்த கார்டை ஒவ்வொரு முறையும் கிடைக்கும்படி கைவிரலை அதில் வைத்து காட்டி இருந்தார். இது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதிலும் எவிக்ஷன் என்ற கார்ட் தன்னிடம் வந்தால் தனக்கு எதிராக இருக்கும் கேங்கை ஒவ்வொருத்தராக வெளியே தூக்கி அனுப்பி விடுவேன் என்று பிளான் போட்டு நிக்சன் விளையாடி இருந்தார். இது தற்போது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.