Big Boss Tamil Dinesh: பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த தினேஷ் தனது மனைவி ரச்சிதா மகாலட்சுமியை பிரிந்தது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். 


வைல்ட் கார்டு என்ட்ரியில் 5 பேர்:


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில், முதல் 3 வாரத்தில் அனன்யா, பவா செல்லதுரை, விக்ரம் வர்மா உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில், நேற்று இரண்டு எலிமினேஷன் இருந்தது. அதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். 


அதேநேரம் இந்த சீசனில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அதில் முதல் நபராக நடிகரும், சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் கனவருமான தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசிய தினேஷ், ”தான் ரொம்ப எமோஷனலான நபர். வாழ்க்கை எப்பொழுதும் கணிக்க முடியாது என்பார்கள். ஆனால், என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று கணிக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தது. ஆனாலும், அதையெல்லாம் பாசிட்டிவாக எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார். 






எமோஷனல் எதிர்பார்ப்பு:


மேலும், தனது வாழ்க்கையில் 8 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என நம்புவதாகவும் பேசியுள்ளார். தனது வாழ்க்கையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவி ரச்சிதாவின் பிரிவு குறித்து மறைமுகமாக பேசியுள்ளார். எமோஷனல் எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றிருக்கும் தினேஷ் போட்டியில் வெற்றிப்பெறுவாரா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பிக்பாஸ் சீசன் 6ல் ரச்சிதா பங்கேற்றிருந்த போது வெளியே இருந்து அவருக்காக தினேஷ் ஆதரவு தெரிவித்து வந்தார். இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்த போது பிக்பாஸ் வீட்டைவிட்டு ரச்சிதா வெளியே வந்ததும் அது சரியாகி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் ரச்சிதாவும், தினேஷுன் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். அதற்கிடையே, தினேஷ் ஆபாச மெச்செஜ் அனுப்பி தன்னை தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் ரச்சிதா புகார் அளித்திருந்தார். 


இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் தினேஷ், தனக்கும் பிக்பாஸ் பட்டத்துக்கும் எனோஷனலான ஒரு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: மெகா பிளானை போட்ட கேப்டன் பூர்ணிமா.. முதல் நாளே புது போட்டியாளர்களுக்கு நேர்ந்த கதி..


Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா காட்டிய வினுஷா, யுகேந்திரன்.. இவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?