Bigg Boss 7 Tamil: மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனன்யா விசித்ராவை நரி என்றும், நிக்சனை கிரிஞ்சியாக இருப்பதாக கூறி அட்வைஸ் கொடுத்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 56 வது நாளை எட்டியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் சாண்டை, வாக்குவாதம், போட்டி என ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் டாஸ்க் வைக்கப்பட்டது. மூன்று டாஸ்குகளில் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தோற்றால் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய 3 பேர் உள்ளே வருவார்கள் அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் போராடி கஷ்டப்பட்டு ஒரு டாஸ்கில் மட்டுமே வெற்றிப்பெற்றதால், 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த பிராவோ வெளியேற்றப்பட்டார். அதேபோல் குறைவாக ஓட்டு வாங்கிய அக்ஷயாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிராவோ வெளியேறியதற்கு பதிலாக விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதேபோல் அக்ஷயாவுக்கு பதிலாக அனன்யா ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனன்யா, போட்டியாளர்களுக்கு சில பட்டங்களை வழங்கினார். அதில் முதலாவதாக விசித்ராவுக்கு நரி என்ற பட்டத்தையும், மாயாவுக்கு விஷ பாட்டிலையும், பூர்ணிமாவுக்கு தவளையையும் கொடுத்தார். மேலும் நிக்சன் பேசுவதாக கிரிஞ்சியாக இருப்பதாக குறிப்பிட்ட அனன்யா, அவருக்கு கிரிஞ்ச் பட்டத்தை கொடுத்தார். கொசு தொல்லை என கூறி கூல் சுரேஷ்க்கு கொசு பட்டத்தையும், ஓவர் அட்வைஸ் என கூறி மணிக்கும் பட்டத்தை கொடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களை கடுப்பேற்றியுள்ளார்.
மிக்சர் என்ற பட்டத்தை அக்ஷயாவுக்கு தான் கொடுக்க வேண்டும், ஆனால் அவர் இப்போது இல்லை என்பதால் அந்த பட்டத்தை விக்ரம் சரவணனுக்கு கொடுக்கிறேன் என்று அனன்யா கூறியுள்ளார். அதேபோல் சொம்பு, பூமர், தேள் உட்பட சில பட்டங்களையும் அவர் சிலருக்கு வழங்கியுள்ளார். ரீ என்ட்ரியாக விஜய் வர்மா மற்றும் அனன்யா வந்துள்ளதால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.