இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், வைல்டு கார்டு என்ட்ரியாக முதல் ஆளாக விஜய் வர்மா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சுத்தியலுடன் வந்த விஜய் வர்மா தனது, போட்டியாளர்களுக்கு இருக்கும் ஒவ்வொரு நெகட்டிக் குணத்தை சொல்லி அவர்கள் முகம் அடங்கிய கல்லை அடித்து உடிஅத்தார். ஒவ்வொரு கல்லும் உடையும் போது ஒவ்வொரு போட்டியாளரின் முகத்திரையும் கிழிவதாக இருந்தது.
முதலில் சரவண விக்ரம் டைட்டில் வின்னர் என கிண்டலடித்து முதல் கல்லை அடித்து உடைத்த விஜய், ரவீணா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் என ஒவ்வொருவரையும் கமெண்ட் செய்து அவர்களின் முகத்தில் அடிப்பதை போல் கல்லை அடித்து உடைத்தார். கடையாக நிக்சன் பொய் சொல்றதை உடைக்க வேண்டும் என கூறி அவரது முகம் இருக்கும் கல்லை அடித்து ஷாக் கொடுத்தார். விஜய் வர்மாவின் ரீ என்ட்ரியால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது நபராக அக்ஷயாவும் வெளியேற்றப்பட்டால், பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வரக்கூடிய வைல்டு கார்டு என்ட்ரி அனன்யாவாக இருக்க கூடும் என்ற தகவல்களை ஃபேன்ஸ் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: புல் ஃபார்மில் வந்த கமல்ஹாசன்.. வசமாக சிக்கிய போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று..!
Sanam on Vanitha: வனிதா மீது கொடூர தாக்குதல்: பிரதீப் ரசிகர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சனம்!