Bigg Boss 7 Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா திட்டமிட்டு விளையாடும் கேம் ஸ்ட்ரேட்டஜி பற்றி விஜய் வர்மா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். போட்டியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா ஆவார் என்று அவரது ஃபேன்பேஸ் டிரெண்டாக்கி வரும் நிலையில், அர்ச்சனாவின் கேம் பிளேன் ஸ்ட்ரேட்டஜி குறித்து விஜய் வர்மா புட்டு, புட்டு வைத்ததுடன், அர்ச்சனாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டாரிடம் எடுத்துரைத்தார். 



 

இந்த நிலையில் அர்ச்சனா குறித்து விஜய் வர்மா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ”அர்ச்சனா ஒரு சின்ன விஷயத்தை கூட நான் இதை செய்தேன், நான் இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நாம ஒரு நேரத்தில் ஒருமுறை தான் அந்த விஷயத்தை சொல்வோம். ஆனால், அவங்க 10 முறை அதே வார்த்தையை சொல்லி சொல்லி மத்தவங்ககிட்ட கொண்டு போய்ட்டு சேர்த்துடுவாங்க. நீ போனா உங்கிட்ட பேசுவாங்க, அவங்க போனா அவங்ககிட்ட பேசுவாங்க. யாருமே இல்லையென்றால் தனியா பேசுவாங்க.


 

இந்த விளையாட்டை பற்றி க்ளியரா தெரிஞ்சு வச்சி இருந்தாங்க. விஷ்ணுவுக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டை எனக்கு நல்லா தெரியும். நான் அங்க தான் இருந்தேன். ஆனால், எங்கிட்டையே அதை திரும்ப, திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இந்த விஷயத்தை அவங்ககிட்ட இருந்து பிரேக் பண்ணனும்னு நினைத்த நான், அவங்க எங்கிட்ட வந்தாலே ஆப் செய்து அனுப்பிவிட்டேன். 






தன்னோட செயல்களை மக்களிடம் எப்படி கொண்டு போய்ட்டு சேக்கறது என்பதில் அவங்க தெளிவாக இருப்பாங்க” எனக் கூறியுள்ளார்.