பிக்பாஸ் சீசன் 7:


கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய சில நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் இருந்தனர்.


இதில் கடந்த வாரம் பூர்ணிமா ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று, விசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தற்போது பிக்பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கெனவே பைனலுக்கு சென்றுள்ளார். 


டாஸ்க்கில் இருந்து வெளியேறிய அர்ச்சனா:


இன்றைய தினத்துக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.  அதில், அர்ச்சனாவுக்கும் தினேஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, டாஸ்க்கில் இருந்து அர்ச்சனா வெளியேறி இருக்கிறார். இரண்டாவது ப்ரோமோவில், "தான் இப்படிப்பட்ட ஆளா என்ற ஃபீல்ங்தான் தான் தனக்கு இருக்கிறது" என்று கூறினார்.


பின்னர், தினேஷ் குறுக்கே பேசத் தொடங்க, "நான் பேசும்போது யாருமே குறுக்கே பேசக்கூடாது. அதைக் கேட்க முடியாது" என்று வம்படியாக கூறுகிறார். "மற்றவர்கள் பேசியதற்கான விமர்சனமாக உங்கள் பேச்சு இருக்கக் கூடாது" என்று தினேஷ் கூற, அர்ச்சனா "தான் டாஸ்கில் பங்கேற்க மாட்டேன்" என்று கூறியபடி ப்ரோமோ முடிகிறது.  மற்றொருபுறம் அர்ச்சனா தன் நிலைபாட்டை எப்படி பலமுறை சொல்லி கேமராவில், ஆடியன்ஸூக்கு பதிவு செய்கிறார் என பாயிண்ட் பிடித்து பேசி விஜய் வர்மா ஸ்கோர் செய்துள்ளார். இதில் அர்ச்சனா கடும் அப்செட்டில் ஆழ்ந்துள்ளார்.



இதைத் தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோவில், ”ஏமாற்றுகாரன், Fraud என இந்த மாறி வார்த்தகளை தான் பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த அர்த்தத்தில் தான் சொல்லுறாங்க. அவங்க பேசுற ஒவ்வொரு விஷயமும், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.


நான் இவங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வைத்திருக்கிறேன்" என்று அர்ச்சனா கூற, "இன்னும் நான்கு நாள் தான், ஏன் இவங்களுக்கு இந்த வன்மம்? ஏன் இப்படி வன்மத்தை கொட்டுறாங்க. ஜாலி பண்ணலாம் என்று பார்த்தால் இப்படி பண்ணுறீங்களே பிக்பாஸ்" என்று மாயா கூறியபடி ப்ரோமோ முடிவடைகிறது. 


கடந்த வார இறுதி எபிசோடில் கூட,  கமல்ஹாசன் கூலாக நிகழ்ச்சியை நடத்தினார். வழக்கமாக, போட்டியாளர்களின் பஞ்சாயத்தை மிகவும் கடினமாக எதிர்கொண்டு வந்த கமல், நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் கூலாக செயல்பட்டார். மேலும், போட்டியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். ஒரு வாரம் தான் இருக்கிறது பகையை வளர்காமல் இருங்கள் என்றும் அட்வைஸ் கூறினார் கமல். கமல் சொல்லி முடித்த  ஒரு நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.