Bigg Boss 7 Tamil: இன்னொருத்தர் பர்சனல் வாழ்க்கைக்குள்ள ஏன் இறங்கி பேசறீங்கன்னு விசித்ராவை பார்த்து கமல்ஹாசன் கேட்கும் புரோமோ வெளியாகியுள்ளது. 


விஜய் தொலைகாட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரபாகி வருகிறது. பிக்பாஸ் போட்டி 90வது நாளை கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.  இந்த வாரம் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் 8 போட்டியாளர்கள் விளையாடினர். அதில், கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். 

டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் 10 பாயிண்ட்டுகள் பெற்ற விஷ்ணு வெற்றிபெற்றார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ”நீங்க தனியா கேமராக்காக  பேசறீங்க.. இன்னொருத்தருடைய

  பர்னல் வாழ்க்கைக்குள்ள இறங்கி, பேசறீங்க” என்றபோது குறுக்கிட்ட விசித்ரா, “எது சொல்றீங்க, என்ன நான் சொன்னது தவறாக போச்சு?” என கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ”மறுபடியும் சொல்லி இன்னொருத்தரை புண்படுத்த விரும்பல. அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். இன்னொருத்தர் மேரேஜுக்கு நாம கவுன்சிலராக இருக்க முடியாது” என அட்வைஸ் செய்துள்ளார். கமல்ஹாசன் இப்படி பேசும்போது தினேஷ், மவுனமாக கண்மூடி வருந்தினார். 



 





 

மற்றொரு புரோமோவில் பேசிய கமல்ஹாசன் சக போட்டியாளர்களுக்கு புத்தாண்டு ரெசலூஷன் என்னவென்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த, மணி அர்ச்சனா தேவையில்லாமல் அழுக வேண்டாம் என்றும், நிக்சனின் 50 பாடலின் பிளேலிஸ்ட் பார்க்க வேண்டும் என்று தினேஷுன், மணியை மாஸ்டராக பார்க்க வேண்டும் என்று விஷ்ணுவும் கூறினர். விஷ்ணு கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிக்சன் கூறியுள்ளார்.