தமிழில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவில் டி.ஆர்.பியை அள்ளும் ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இதில் தற்போது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் என்றால் அது மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், நிக்சன், மணிசந்திரா, ரவீனா, விஷ்ணு மற்றும் விஜய் வர்மா என மொத்தம் 10 பேர் உள்ளனர். இதில் வரும் வாரங்களில் எத்தனை பேரை எவிக்ட் செய்யவுள்ளனர் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். 


இதில் இந்த வாரம் எவிக்சனுக்கு தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் என்றால், மாயா, மணி, விஷ்ணு, ரவீனா மற்றும் தினேஷ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றைய எப்பிசோடில் மார்னிங் ஆக்டிவிட்டி போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் “போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பிக்பாஸ் டைட்டில் வெற்றி அடைந்த பின்னர் என்ன பேசுவீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.


மேலும் இந்த வீட்டில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த போட்டியாளர்களில் யார் உங்களுக்கு தொல்லை கொடுத்த அல்லது இடையூறு ஏற்படுத்திய போட்டியாளர் எனபது குறித்து குறிப்பிட்டு பேசவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதில் பேசிய போட்டியாளர் பூர்ணிமா, “நான் இந்த வீட்டில் மிகவும் கவலையாக இருந்தபோதெல்லாம் என்னை ஊக்குவித்தது எனக்கு உறுதுணையாக இருந்தது எல்லாம் மாயாதான். அதேநேரத்தில் இந்த வீட்டில் எனக்கு எதிராக இருந்த நபர் என்றால் ஒருவர்தான், அது பிக்பாஸ்.


ஐயா.. நீங்க எனக்கு நெறையா ஹெல்ப் பண்ணியிருக்கீங்க, நான் இல்லைனு சொல்லல. ஆனால் என்னை அதிகம் டவுன் ஆக்கியது இந்த வீட்டில் இருக்கும் நபர்களைவிட நீங்கதான். தொடக்கத்தில் இருந்தே நான் “கன்ஃபெர்ஷன் ரூமுக்கு கூப்புடுங்க, எனக்கு இங்க இருக்கறவங்கிட்ட எந்த பிரச்னையும் கிடையாது, உங்ககிட்டதான் சில கிளாரிஃபிகேஷன்ஸ் இருக்கு”னு சொன்னபோது, நீங்க என்ன கூப்பிட்டது கிடையாது.


இதையெல்லாம் கடந்து நாம் விக்ரமை ‘கரப்பான் பூச்சி’ என பட்டப்பெயர் வைத்தபோது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என விக்ரமிடம் கூறினார்கள். எனக்கு இதேபோன்று நடந்தது. அதற்கு எதிராக நான் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்யவில்லை. எனக்கு விருப்பம் இல்லாமல்  என்னை வற்புறுத்தி எனது தலையில் 'தவளை’ என எழுதிய பேண்டை போட வைத்தீர்கள். இதில் எனக்கு சுத்தமாக விருப்பமே கிடையாது.


இதை அனன்யா எனக்கு கொடுத்திருந்தாலும், அனன்யா கொடுத்த 13, 14 டேக்கில் எது வந்திருந்தாலும் அதில் எனக்கு ஓ.கே இல்லை. நான் விக்ரமை கரப்பான்பூச்சினு சொல்லுவதோ, இங்கு இருப்பவர்களை அழுகுறீங்கனு சொல்வதை ’புல்லி’ (Bully) எனக்கூறுகிறீர்கள் என்றால், என்னை தவளை டேக்  இரண்டு நாட்கள் அணிய வைத்ததும் புல்லிதான். விக்ரமை கரப்பான் பூச்சி எனக்கூறியதற்கு நான் விக்ரமிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். பிக்பாஸே எனக்கு தடையா இருந்தபோதும் நான் இந்தக் கோப்பையை வென்றுள்ளேன்” இவ்வாறு பூர்ணிமா பேசினார். 


இதற்கு சக போட்டியாளர்களில் விசித்ரா மற்றும் ரவீனா அதரவளிப்பதுபோல் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இதுவரை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் செய்தது தவறு என ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்துகொண்டு பேசியதில்லை. முதல் முறையாக பூர்ணிமா மிகவும் தைரியமாக பிக்பாஸ் செய்த தவறை சுட்டிக்காட்டியுள்ளது, பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.