பிக் பாஸ் வீடு கலைக்கல்லூரியாக மாறி இன்றைய டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. ப்ரின்சிபலாக தினேஷ், ப்ரொஃபசராக மாயா, விஷ்ணு, நிக்சன் உள்ளிட்டோர் இருக்க, மற்றவர்கள் மாணவர்களாக பர்ஃபாமன்ஸ் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், இன்றைய டாஸ்க் படி ப்ரொஃபசராக இருக்கும் நிக்சன் அர்ச்சனாவை நேரடியாகத் தாக்கி பேச, அதற்கு மற்ற கண்டெஸ்டண்ட்கள் விசிலடித்து அவரை தூக்கிச் சுற்று வரவேற்பு தந்துள்ளனர்.


“ஆரம்பத்துல இருந்த ஃபன் செத்துடுச்சு.. சிரிப்பா சொல்றவன் சொன்னா அது சிரிப்பு.. கோபமா சொல்றவன் சொன்னா அது கோபம்னு அர்ச்சனாங்கற கேரக்டர் நினைச்சிட்டு இருக்காங்க.. நீ நல்லவன்னா அவனும் நல்லவன் தான். இந்த  வீட்டுக்கு நீங்க வந்து இருக்கறது ஃபன் பண்ண தான். ரத்தம் வர அளவுக்கு ஃபிசிக்கல் டாஸ்க்ல விளையாண்டாலும் ஹவுஸ்மேட்ஸ் பாசமா சந்தோஷமா இருந்தாங்க.. அப்படி இருந்த சந்தோஷம் 5 வைல்டு கார்டு வந்ததுக்கு அப்பறம் இந்த வீட்ல இல்ல.. என்று நிக்சன் பேச, அவருக்கு பூர்ணிமா, விஜய், விசித்ரா ஆகிய கண்டெஸ்டண்டுகள் ஏகோபித்த வரவேற்பு தந்து தூக்கி சுற்றுகின்றனர்.


 



ஏற்கெனவே வார்த்தைப் போரால் ரணகளமாக மாறியுள்ள பிக்பாஸ் வீடு இன்றைய நிக்சனின் பேச்சால் என்ன ஆகப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.