பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான நிக்ஸனின் செயல் கடுமையான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பெற்றுள்ளது. 


கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி  ஒளிபரப்பாகின் வருகிறது. 60 நாட்களை கடந்து விட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து தொடர்ந்து 7வது நாளாக வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 


இப்படியான நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டார். இன்னும் பூர்ணிமா ரவி, நிக்ஸன், விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ், மணி சந்திரா, விஜய் வர்மா, ரவீனா, அனன்யா ராவ், சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு நிகழ்ச்சியில் உள்ளனர். இப்படியான நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் நிக்ஸன் தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. 






அதில் பூர்ணிமா ரவியிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்த வார வீட்டின் கேப்டனாக இருந்த நிக்ஸன், அவரை இரண்டு கையையும் மேலே தூக்கி நிற்குமாறு சொல்லி தண்டனை  வழங்கினார். இதனை ஏற்று பூர்ணிமாவும் நிற்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதேதான் நிக்ஸன் முன்னதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஐஷூவிடமும் செய்து காட்ட சொன்னதாகவும் பலரும் தெரிவித்தனர். ஆக, “பெண்களுக்கு தண்டனை வழங்குகிறேன் என்ற பெயரில் இவ்வளவு கேவலமாக நிற்க வைத்து நிக்ஸன் ட்ரீட் செய்கிறார்” என தாறுமாறான கண்டனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. 


ஏற்கனவே நிக்ஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஐஷூவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது, அவருக்கு கண்ணாடி வழியே முத்தம் கொடுத்தது, விசித்ரா மற்றும் அர்ச்சனாவிடம் சண்டைக்கு சென்றது, பெண்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வைத்தது என பல குற்றச்சாட்டுகள் நிக்சன் மேல் எழுந்தது. இதனால் கமலும் தனது கண்டனத்தை நிக்ஸனுக்கு எதிராக பதிவு செய்தார். இப்படியான நிலையில் சக பெண் போட்டியாளரிடம் நிக்ஸன் நடந்து கொள்ளும் முறை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.