Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீக் என்ட் எபிசோடில் பேசிய கமல்ஹாசன், விக்ரமை காக்ரோச் என பட்டப்பெயர் வைத்த மாயாவை கண்டித்ததுடன் குட்டிக்கதையும் கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கிறது. பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதும், விமர்சிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் விக்ரமை மாயா, பூர்ணிமா, விஷ்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் நட்பாகப் பழகினாலும் கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர். விக்ரமை ‘காக்ரோச்’ - கரப்பான்பூச்சி என மாயா பேசியதைப் பார்த்து டென்ஷனான கமல்ஹாசன், வீக்கெண்ட் எபிசோடில் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.
எபிசோடின் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டாளர்களை ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய வைத்து கேட்ட கமல்ஹாசன், கடைசியாக தனது கண்டிப்பு முகத்தை காட்டினார். கடைசி 10 நிமிடங்கள் கமல்ஹாசன் பேசியது பிக்பாஸ் போட்டியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கமல்ஹாசன் பேசியபோது, ”நாமினேஷன் டிஸ்கஸ் பண்ணாதீங்கன்னு நான் சொல்லி இருக்கேன். நாமினேஷன் குறித்து தினேஷ், விஷ்ணு மாயா என குரூப், குரூப் ஆக டிஸ்கஸ் பண்றாங்க. வழிச்சிடுவேன்னு சொல்றது எல்லாம் சரியா.. நீங்கள் தான் வழிக்கிறீர்கள் அப்படின்னு நினைக்கிறீர்களா... நீங்கள் நாமினேட் தான் பண்ண முடியும்.. ஆனால் எலிமினேட் செய்வது இவர்கள் தான் (ஆடியன்ஸ்).. உங்கள் பலத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...”என்றார்.
அடுத்ததாக மாயாவிடம் திரும்பிய கமல், ”மாயா...! காக்ரோச்சை எல்லாம் ஒழிக்கலாம் என்று சொன்னீங்களே, யாரு அது..? காக்ரோச் பத்தி ஒரு கதை சொல்றேன். அணு வெடிப்பு ஏற்பட்டால் கடைசியாக பொழச்சி இருப்பது காக்ரோச் தான் என நம்பறாங்க. அப்படின்னா இந்த மேடையில்ல கடைசியா கோப்பையில எல்லாரும் விழுந்ததுக்கு அப்பறம் நிக்கறது அந்த காக்ரோச் தான்னு வச்சிக்கலாமா..?
கடைசியில் ஜெயிக்கப்போவதை காக்ரோச்னு சொல்ட்றீங்க. சகப்போட்டியாளரை தரம் இல்லாத வார்த்தையால் கூப்பிடலாமா.. அதேபோல், நானும் தப்பான எண்ணம் இல்லாமல், உங்களை ஜந்துக்களின் பெயரை வைத்து அழைக்கலாமா? சக மனிதரை அவருக்கான மரியாதையுடன் நடத்துங்க. நாமினேஷன் பற்றி டிஸ்கஸ் பண்ணாதீங்க” என்றார்.
மேலும், “விக்ரமிற்கு காக்ரோச் என்ற பெயரை யார் வைத்தது எழுந்திருங்கள்” என கமல்ஹாசன் கூறியபோது, பூர்ணிமா, ரவீணா, மாயா, விஷ்ணு, நிக்சன் உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். அப்போது டென்ஷனான கமல்ஹாசன் “சக நண்பனை மரியாதை இல்லாமல் பேசுவது நட்பே இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: Lal Salaam First Single: ஏரி, குளம் நிறைஞ்சிட போடுங்க குலவை.. ‘லால் சலாம்’ முதல் பாடல் க்ளிம்ஸ் வெளியீடு!