Bigg Boss 6 Tamil Promo : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், அசல் மற்றும் ஆயிஷா ஆகிய இரு போட்டியாளர்கள் அனைவரின் முன் அமர்ந்து பேச துவங்கினர். இதில், அசல் ஆயிஷாவை பார்த்து என்னை வாட போட என அழைக்காதீர் என சொன்னார். அதற்கு ஆயிஷா, உங்களுடன் எனக்கு நல்ல வைப் ஆனது அதனால்தான் நான் அப்படி அழைத்தேன். இனி அப்படி கூப்பிட மாட்டேன் என தெளிவு படுத்தி கொண்டார். பின், தனிமையில் ஆயிஷா அந்த விஷயத்தை நினைத்து புலம்புகிறார். சோகமடைந்த ஆயிஷாவை பார்த்த அசல், ஆயிஷாவின் அருகில் செல்கிறார்.
இதற்கு முன்னதாக வெளியான ப்ரோமோக்கள் இரண்டும் முரண்பாடாக இருந்தது. காலையில் வந்த முதல் ப்ரோமோவில், டாஸ்க் கொடுக்கப்பட்ட பிறகு, அனைத்து போட்டியாளர்களும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
அதற்கு அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், மகேஷ்வரியும் அஸீமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டீ காபி குடிப்பதற்கு துவங்கிய சண்டை இறுதியில் பெரிய கலவரமாக மாறியது. இதில், கிச்சன் டீமின் தலைவர் ஷிவின், மொரட்டு தனமாக ஹவுஸ் மேட்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் ஜாலியாக போன பிக் பாஸ் வீடு ரண களமாக இருக்கிறது.இன்றைய நிகழ்ச்சியில், நேற்றை விட பெரிய கண்டெண்ட் இருக்கிறது என நன்றாக தெரிகிறது.
மேலும் படிக்க : Thunivu Update: முடிந்தது துணிவு ஷூட்டிங்... எழுந்தது ரிலீஸ் எதிர்பார்ப்பு... பொங்கலுக்கு உறுதி!