அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் மூன்றாவது திரைப்படமான AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அப்டேட்
இந்த நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதாகவும் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நட்சத்திரப்பட்டாளம்
அண்மையில் இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி மற்றும் சிபி சக்ரவர்த்தி இணைந்திருப்பதை அவர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உறுதி செய்தது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, பாலா சரவணன், யோகி பாபு, ஜான் விஜய், தர்ஷன், விஜய் முத்து, பிரேம் குமார், ராமசந்திரன், சங்கர், ஜி.எம். சுந்தர், சரவணன் சுப்பையா மற்றும் பலர் என ஒரு மிக பெரிய திரை பட்டாளம் இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.