பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை  7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  பிக்பாஸ் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன்,மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார்,  வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பல்துறை சார்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.






இதில் இந்த முறை பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் கேப்டனை கவற தவறும் 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் பவா செல்லதுரை, வினுஷா தேவி, அனன்யா ராவ், நிக்ஸன், ரவீனா தாஹா, ஐஷூ ஆகிய 6 பேரும் கேப்டன் விஜய்யால் உள்ளே அனுப்பப்பட்டனர். இந்த ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கென்று தனி விதிமுறைகள் உள்ளது. இப்படியான நிலையில் இந்த வாரம் இருவீட்டிலும் தனி தனியாக நாமினேஷன் செய்யப்பட்டனர். 


அதாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டது. அவர்களில் அனன்யா ராவ், ஐஷூ, பவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப், ஜோவிகா, ரவீனா தாஹா, ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாக்குப்பதிவு நேற்று வரை நடைபெற்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று முதல் நபராக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க: படிப்பு முக்கியமே இல்லை.. சீறிய ஜோவிகா... விசித்ராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நெட்டிசன்கள்..!