பிக்பாஸ் 9 தமிழ் 


பிக்பாஸ் தமிழில் 9 ஆவது சீசன் நேற்று அக்டோபர்  5 ஆம் தேதி முதல் தொடங்கியது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு மொத்த 20 போட்டியாளர்கள் இந்த முதல் நாளில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர். வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , பிரவீன் காந்தி , பிரவீன் , ரம்யா ஜோ , சபரி , கெமி ,ஆதிரை , வினோத் , வியானா , எஃப் ஜே , அப்சரா சிஜே , நந்தினி , வினோத் , கமருதின் , கலையரசன் ஆகியோர் இந்த சீசனின் போட்டியாளர்கள். 

Continues below advertisement



குரட்டையால் வந்த சண்டை


இந்த சீசனில் பலரது கவனத்தை ஈர்த்த போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனே தனது நடிப்பு பற்றிய தற்பெருமையை பேசத் துவங்கிவிட்டார் திவாகர். முதல் நாள் பிரவீன் காந்தியிடன் சென்று ஒரே வருடத்தின் நான் என்னுடைய திறமையால் பெரியாளானேன் என்று திவாகர் பேச அவரை கண்டுகொள்ளாமல் பிரவீன் காந்தி சைட் வாங்கினார்.


தற்போது தொடங்கிய இரண்டாவது நாளே  வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் பிற போட்டியாளர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் இரவு தூங்கும்போது  வாட்டர்மெலன் ஸடார் திவாகர் குறட்டை விட்டதால் தூங்க முடியவில்லை என மற்றவர்கள்  புகார் தெரிவித்தார்கள். இதனால் பிரவீன் மற்றும் திவாகர் இடையே மோதல் ஏற்பட்டது. பிரச்சனையை தீர்த்து வைக்க வந்த கெமியை வாட்டர்மெலன் ஸ்டார் 'நீ சும்மா இரும்மா' என்று சொன்ன கெமி அவருக்கு எதிராக திரும்பினார். பின் நந்தினி மற்றும் திவாகரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


இன்ஸ்டாகிராமில் காமெடியாக ரீல்ஸ் வெளியிட்டு வந்த திவாகர் தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்றும் நடிப்பு அரக்கன் என்று பட்டம் கொடுத்துக் கொண்டார். அவரை விமர்சித்தவர்களுக்கு எதிராக ரீல்ஸ் பதிவிட்டார். இப்படி வெளியில் ஆட்டம் ஆடிய திவாகர் தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் முதலே மொத்த போட்டியாளர்களிடம் கெட்ட பெயர் எடுத்துள்ளார். இந்த சீசனில் இனி வரக்கூடிய நாட்களில் திவாகரை மையப்படுத்தி பல சர்ச்சைகள் உருவாகும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.