அந்த வகையில்,  ரவீனாவின் குடும்பத்தில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.  ரவீனா குடும்பத்தினர் ரவீனா - மணி ரிலேஷன்ஷிப் குறித்து மிகவும் கடுமையாக எச்சரித்தனர். "உன் மேல கோவமாக இருக்காங்க, அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்கனு போய் சொல்லிக்கிட்டு இருக்க. நீ இங்க ஒன்னும் மணிக்காக விளையாட வரலை. இது நமக்கு தேவையும் கிடையாது" என மிகவும் கடுமையாக எச்சரித்தனர். மேலும், ரவீனாவின் கேமை விளையாட மணி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதை தொடர்ந்து மணியிடம் சென்று "இந்த ஷோவில் தனியா உட்கார்ந்து பேசவா வந்தீங்க. இனிமே அது போல தனியா கூட்டிட்டு போய் பேசாத" என நேரடியாகவே கண்டித்துவிட்டார். 


பூமர் ஆண்ட்டி:


இந்ந நிலையில், ரவீனாவின் ஆண்ட்டியின் செயலுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். அதாவது, டாக்சிக் என சொல்லி பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 










இதை தொடர்ந்து, இன்றைக்கு "உங்க அம்மா வந்திருந்தா இப்படி பேசி இருக்க மாட்டாங்க" என்று ரவீனாவிடம் மணி கூறியிருந்தார். இது ஒரு பக்கம்  இருக்க, மணிக்கு ஆதரவாக பல கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதாவது, மணியை நேற்று ரவீனாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில், தன் தரப்பு நியாயத்தை எடுத்த சொல்ல முடியாத நிலையில் தான், நேற்று மணியின் அண்ணன் மகள் முன்பு மணி கண்ணீர் சிந்தியிருக்கிறார்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.