Bigg Boss Tamil: கதறி அழுது வீடியோ பகிர்ந்த 'பிக்பாஸ்' தனலட்சுமி.. பூடகமான பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை லைம்லைட்டில் இருந்து வந்த தனலட்சுமி, அதன் பின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக காணாமல் போனார்.

Continues below advertisement

டிக்டாக் செயலி மூலம் சர்ச்சைக்குரிய பிரபலமாக உருவெடுத்து, பின் பிக்பாஸ் சீசன் 6இல் நுழைந்து போட்டி போட்டு கேம் விளையாடி லைம்லைட்டு வந்தவர் தனலட்சுமி.  தன் உறுதியான கேமுக்காக தனலட்சுமி பாராட்டப்பட்டாலும், அவரது முன் கோபம், பிடிவாதம், வீண் சண்டை, கடும் வாக்குவாதம் என பல காரணங்களால் இணையத்தில் பெருமளவு ட்ரோல் செய்யப்பட்டார். 

Continues below advertisement

எனினும் விமர்சனங்கள் தாண்டி சுமார் 70 நாள்களுக்கும் மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்த தனலட்சுமி ஆதரவுகள் எதிர்ப்புகள் என சரிசமமாகப் பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தனக்கு பட,சீரியல் வாய்ப்புகள் குவியும் என தனலட்சுமி எதிர்பார்த்த நிலையில், நிலைமை தலைகீழானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை லைம்லைட்டில் இருந்து வந்த தனலட்சுமி, அதன் பின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக காணாமல் போனார். இந்நிலையில் வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லாமல் தற்போது தன் சமூக வலைதளப் பக்கங்களில் மட்டும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் தனலட்சுமி தான் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது அவரை பின் தொடர்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ஓம் நம்ச்சிவாய’ எனும் கேப்ஷனுடன் வீடியோ பகிர்ந்துள்ள தனலட்சுமி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியபடி கதறி அழும் வீடியோவைப் பகிர்ந்து தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

“முன்னதாக வாழ்க்கையின் முடிவு மரணம்” எனும் கேப்ஷன் உடன் தனலட்சுமி இந்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பின் அந்த வார்த்தைகளை அவர் தூக்கிவிட்டு ஓம் நமச்சிவாய என கேப்ஷன் இட்டதாவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மிக இளம் வயது போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி இப்படி விரக்தியாக மரணம் பற்றி எல்லாம் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்ற சீசன் 6இல் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனலட்சுமி  நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் வீதம் ரூ.11.40 லட்சம் சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் தனலட்சுமி இப்படி வீடியோ வெளியிட்டாரா எனக் கேள்வி எழுப்பியும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும் நெட்டிசன்கள் அவரது பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Continues below advertisement