உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி இன்று நடக்கும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. 


இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 15வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடன் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணி மிக தீவிரமாக உள்ளது. 3வது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் எண்ணமாக உள்ளது. 


இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு டெஸ்ட் ஒன்றை வைத்தார். 


அதில், 



  • ரன் அவுட் - இலக்கை எட்ட முடியாமல் பாதியிலேயே வெளியேறுவது

  • வைட் பால் - வந்த இலக்கை மறந்து வேறு பாதையில் செல்வது

  • ஹிட் அவுட் - எதிராளிக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் தன்னைத்தானே வீழ்த்திக் கொள்வது

  • ஓவர் த்ரோ - இவரது ஆட்டம் எதிராளிக்கு தான் சாதகம்

  • 12 th மேன் - வாய்ப்பு வரட்டும் என காத்திருப்பவர்

  • ஸ்லெட்ஜிங் - பிறரை அவமரியாதை செய்து ஆதாயம் தேடுபவர்

  • கோல்டன் டக் அவுட் - பில்டப் ஜாஸ்தி பர்பாமன்ஸ் ஜீரோ

  • யார்கர் - இவரது செயல் மற்றும் பேச்சு எதிராளியை நிலைகுலைய செய்யும் என போர்டு ஒன்று வைக்கப்பட்டது. 


இந்த எட்டில் ஏதேனும் இரண்டை தேர்வு செய்து வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களில் இருவருக்கு வழங்க வேண்டும் என கமல் தெரிவித்தார். முதலில் அர்ச்சனாவிடம் இருந்து இந்த ஆட்டமானது தொடங்கப்பட்டது. 


அதன்படி, 



  • அர்ச்சனா - தினேஷ் (யார்கர்), விக்ரம் (12 th மேன்)

  • தினேஷ் - ஜோவிகா (வைட் பால்), விஷ்ணு (ஸ்லெட்ஜிங்)

  • விசித்திரா - மாயா (ஓவர் த்ரோ), தினேஷ் (கோல்டன் டக்)

  • மாயா - கூல் சுரேஷ் (ஹிட் அவுட்), விஷ்ணு (யார்கர்)

  • பூர்ணிமா - மாயா (ஓவர் த்ரோ), அக்ஷயா (ரன் அவுட்)

  • கூல் சுரேஷ் - நிக்சன் (வைடு), அக்ஷயா (12th மேன்)

  • விக்ரம் - அக்ஷயா (ஹிட் அவுட்), மாயா (ஓவர் த்ரோ)

  • விஷ்ணு - தினேஷ் (ஸ்லெட்ஜிங்), ஜோவிகா (வைடு)

  • மணி - மாயா (ஸ்லெட்ஜிங்), கூல் சுரேஷ் (ஹிட் அவுட்)

  • ஜோவிகா - விக்ரம் (12th மேன்), அர்ச்சனா (வைடு) என மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பேசுவது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. 




மேலும் படிக்க: IND vs AUS Final 2023 LIVE: 2 மணிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம்.. இப்போதே வர தொடங்கிய ரசிகர்கள் கூட்டம்..!