பிக்பாஸ் சீசன் 7:


பிக்பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss 7 Tamil) இன்னும் 4 வாரங்களில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இன்று 78ஆவது நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில், சென்ற வாரத்தில் மட்டும் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் என இரு போட்டியாளர்கள் எவிக்டாகி வீட்டை விட்டு வெளியேறினர்.


மேலும் சென்ற வீக் எண்ட் எபிசோட்களில் சரமாரியாக கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்க்கு அறிவுரை வழங்கிய நிலையில், இந்த வாரம் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   தற்போது விஷ்ணு, பூர்ணிமா, ரவீனா, மணி, விசித்ரா, மாயா, தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, விஜய் வர்மா ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்றைய 78ஆவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 


அதில், போட்டியாளர்கள் ஒருவரைக்கொருவர் நாமினேட் செய்ததற்கான காரணத்தை பிக்பாஸ் கூறியுள்ளார். அதன்படி, "அவங்க கேம்மை மறந்துட்டு, அவருக்கு விளையாடுறாங்க, ஒருதலைப்பட்சமாக நடந்துக்கிறாங்க, அவங்க பிரச்னைக்கே அவங்க குரல் கொடுக்காமா இருக்காங்க, ஒருவரின் நிழலையே இருந்து விளையாடிட்டு இருக்காங்க,  புரிதல் குறைவாக இருக்கு" போன்ற காரணங்களை கூறியப்படியே ப்ரோமோ முடிவடைகிறது.  இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ரவீணா, விசித்ரா, விக்ரம் ஆகியோர் உள்ளனர். இதில், ரவீணா குறைந்த வாக்குகளை பெற்று  வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


எலிமினேட் ஆகுகிறாரா ரவீணா?


அனைத்து பிக்பாஸ் சீசன்களிலும் காதல் ஜோடிகள் வலம் வருவது உண்டு. அதன்படி, இந்த சீசனில் மணி, ரவீணாவும் காதல் ஜோடிகளாக காண்பிக்கப்பட்டு வருகிறார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மணிக்காக விளையாடுவதாக ரவீணா மீது சக போட்டியாளர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதைக் கண்டுகொள்ளாத ரவீணா, "நான் மணிக்காக தான் விளையாடுகிறேன்” என்று ஓப்பனாக சொல்லிக் கொண்டி விளையாட்டி வருகிறார்.


சமீபத்தில் நடந்த 5 கோல்டு ஸ்டார் டாஸ்கில் கூட, மணிக்கு ஐந்து ஸ்டார்கள் கிடைக்க வேண்டும் என்றே தான் விளையாடியதாக சக போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டார். அதோபோல, கடந்த வாரம் நடந்த டான்ஸ் டாஸ்கில் கூட, மணிக்கு மொத்த பணத்தை கொடுத்து கேம்மை மாற்றினார். இதனால், கடுப்பாகிய பிக்பாஸ், தகுதியான போட்டியாளர்களுக்கு சரியான பணத்தை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 


அதேபோல, நேற்றைய வார இறுதி எபிசோடிலும் கமல்ஹாசன், மணி, ரவீணாவை லெப்ட் ரைட் வாங்கினார். அதாவது ”ஒருவருக்காக நீங்க விளையாடினால் என்னுடன் தான் நீங்க இங்கு வந்து நிற்பீங்க" என்று வார்னிங் கொடுத்தார் கமல்.  மேலும், இன்றைய  மார்னிங் டாஸ்கில் கூட, சக போட்டியாளர்கள் ரவீணா விளையாட்டு பற்றி விமர்சித்து இருந்தனர்.  இதோ இல்லாமல், அதிக வாக்குகளை பெற்று நாமினேஷன் லிஸ்டிலும் ரவீணா இருக்கிறார். பிக்பாஸ் பார்வையாளர்களின் அதிருப்தியும் கூடவே சேர்ந்துள்ள நிலையில் இந்த வாரம் ரவீணா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கூறி வருகின்றனர்.