Actress Janani : சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை மறுபிறப்பு நிகழ்ச்சியில் நடிகை ஜனனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனனி, "பிக்பாஸில்தான் வெளியேறியதிலிருந்து பிக்பாஸ் பார்ப்பது இல்லை. அதற்கு நேரம் இல்லை என்பதை காரணமல்ல. பார்க்க பிடிக்கவில்லை" என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படம் ஆபாசமாக்குவது குறித்த கேள்விக்கு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இல்லாமல். நல்ல வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து ரீல்ஸ் போடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். 



தற்போது கௌதம் கார்த்திக் உடன் கிரிமினல் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு மகளாக நடித்துள்ளேன். இது குற்ற பின்னணியில் உருவாகியுள்ளது என்றார். பிக்பாஸ்க்கு பிறகு பட வாய்ப்பு குறைந்துள்ளதா? என்ற கேள்விக்கு, பிக் பாஸ்க்கு பிறகு பட வாய்ப்பு குறைந்துள்ளது என்பது இல்லை. முன்பு எப்படி நடித்தேனோ அதேபோன்றுதான் தற்போதும் அதே சம்பளம் பெற்றுகொண்டு நடித்து வருவதாக தெரிவித்தார்.