பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன், 10 நாட்களை கடந்த நிலையில் நாளுக்கு நாள் சூடி பிடித்து வருகிறது. “எங்க இருந்து எப்படி பிரச்சினை வருகிறது” என்பதே புரியவில்லை. கடந்த ஆறு சீசன்களை காட்டிலும் இந்த 7 வது பிக் பாஸ் சீசனில் ஏராளமான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 



கோல்ட் ஸ்டார் அட்வான்டேஜ் :


அந்த வகையில் வாரம் வாரம் கோல்ட் ஸ்டார் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அப்படி ஒவ்வொரு வாரமும் கோல்ட் ஸ்டார் வெல்லும் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் காத்துக் கொண்டு இருக்கிறது. அதாவது அதிகப்படியான கோல்ட் ஸ்டார்களை கைப்பற்றும் போட்டியாளர் தன்னிடம் கைவசம் உள்ள ஸ்டார்களை வைத்து ரூல்ஸ் படி  ஏவிக்ஷனில் இருந்து ஒரு முறை தப்பித்து கொள்ளலாம்.   


யார் சிறந்த என்டர்டெய்னர் ?


அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற கோல்ட் ஸ்டார் டாஸ்கில் சரவண விக்ரம் அதில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான கோல்ட் ஸ்டார் டாஸ்க் நேற்று தொடங்கியது. இந்த டாஸ்க் விதிமுறைகளின் படி ஒவ்வொரு போட்டியாளரும் எந்த வகையில் மற்ற ஹவுஸ்மேட்ஸை விட மக்களை அதிகமாக என்டர்டெய்ன் செய்கிறார்கள் என்பது குறித்து டிபேட் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் விவாதிப்பதை பொறுத்து மற்ற போட்டியாளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இதில் அதிகமான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கபட்டு அவருக்கு கோல்ட் ஸ்டார் வழங்கப்படும். 


வெற்றி பெற்ற கூல் சுரேஷ் :


நேற்றைய எபிசோடில் கூல் சுரேஷ் மட்டுமே தன்னுடைய விவாதத்தை முன்வைத்தார். அத்துடன் எபிசோட் முடிவடைந்ததால் மற்ற போட்டியாளர்களின் விவாதங்கள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பின்னர் யார் வெற்றியாளர் என்பது அறிவிக்கப்படும்.  வெளியான தகவலின் படி இந்த வாரத்திற்கான கோல்ட் ஸ்டார் டாஸ்கில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார் முதலில் விவாதம் செய்த கூல் சுரேஷ்.


 



நிச்சயமாக கூல் சுரேஷ் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பதுடன் அனைவரையும் கலகலப்பாகவும் வைத்துள்ளார். ஆனால் அவரை விடவும் மக்களை என்டர்டெயின் செய்யும் போட்டியாளர்கள் பலர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பெரும்பாலான ஓட்டுக்களை கூல் சுரேஷ் பெற்று இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது. 


காரணம் என்ன ?


கூல் சுரேஷ் அதிகமான வாக்குகளை பெறுவதற்கு முக்கியமான காரணமாக போட்டியாளர்கள் கொடுத்துள்ள விளக்கம் அவர் விவாதத்தின் இறுதியாக "இவனுங்க யாரும் எனக்கு ஒட்டு போடமாட்டானுங்க" எனக் கூறியது அனைவரையும் கவர்ந்ததாக கூறியுள்ளனர். மேலும் ஒரு சில வாக்குகளை மாயா, பிரதீப், ஜோவிகா உள்ளட்டோர் பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.  அநேகமாக வார இறுதியில் கமல் சார் வரும் எபிசோடில் கூல் சுரேஷுக்கு அதிகமாக வாக்குகள் கொடுத்ததற்கான விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.