பிக்பாஸ் சீசன் 7:


பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், 83 நாள்களைக் கடந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போல இல்லாமல், முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் இந்த முறை இந்த பிக்பாஸ் சீசன் நடந்து வருகிறது.


இந்த சீசனில் இரண்டு வீடு, புதிய டாஸ்க்குகள், டபுள் எவிக்ஷன் என தினந்தோறும் சுவாரசியமாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்த 20 நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும், டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்ற தகவலும் இணையத்தில் அடிப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் ஜேமஸ் வசந்தன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அர்ச்சனாவை கடுமையாக சாடியிருந்தார். 


அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ்  வசந்தன்:


அவர் கூறுகையில், "அர்ச்சனாவிற்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அது அவரவரின் விருப்பம். அதில், எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்,  பொதுவெளியில், உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பதை அர்ச்சனா துணிவோடு செய்கிறார்.  


புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று ஒவ்வொரு படம் தொடங்குவதற்கு முன்பு விழிப்புணர்வு காட்சி ஒளிபரப்பாகிறது. இப்படி இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 100 நாட்கள் புகை பிடிக்காமல் அர்ச்சனா கட்டுப்படுத்தி இருக்கலாம்.






ஆனால், அர்ச்சனா அதை செய்யவில்லை.  அவர் தனிப்பட்ட முறையில் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்கலாம். அது அவரது விருப்பம். ஆனால், உலகம் முழுவதும் சிறுவர்கள் உட்பட அனைவரும் பார்த்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  அர்ச்சனா புகைப்பிடிப்பது தவறான உதாரணமாக உள்ளது. இப்படி செய்பவருக்கு பிக்பாஸ் டைட்டில் கொடுப்பது சமூகத்துக்கு தவறான பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.


18 வயதுக்கு மேல் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று உணர்த்துகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும்” என்றார்.  மேலும், ”பல நல்ல குணங்களை கொண்டு விசித்ராவுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கலாம். சிறந்த ரோல் மாடலாக விசித்ரா உள்ளார். அவரை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை" என்றார் ஜேமஸ் வசந்தன்.