பிக்பாஸ் சீசன் 7: 


பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.


சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். 


ரன்னர் அப் மணி:


இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். 


இதில் அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வாகி உள்ளதாக தகவல்கள் கசிந்த வரும் நிலையில்,ரன்னர் அப்பாக மணி சந்திரா (Manichandra) தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.  நிகழ்ச்சியில் தொடங்கிய சில நாட்களிலே மணி வெளியேறிவிடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆரம்பத்தில் பெரிய அளவில் மணிக்கு ஆதரவு எதுவும் இல்லை. 


மணி வாங்கிய சம்பளம்:


குறிப்பாக இந்த சீசனில் மணி, ரவீணாவும் காதல் ஜோடிகளாக காண்பிக்கப்பட்டு வந்தனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் மணிக்காக விளையாடுவதாக ரவீணா மீது சக போட்டியாளர்களும், ரசிகர்களும் விமர்சனங்களை வைத்து வந்தன.  மேலும், மணி எந்த விஷயத்திற்கும் முன்வருவதில்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வந்தனர்.


இருப்பினும், மற்றொரு தரப்பில் இருந்து மணிக்கு ஏகப்பட்ட ஆதரவுகள் வந்தன.  இப்படிப்பட்ட சூழலில் தான் மணி இறுதிச் சுற்றுக்கு வந்து ரன்னர் அப்பாக தேர்வாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


3வது ரன்னர் அப் மாயாவின் சம்பளம்:


மணிசந்திராவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என்று கூறப்படுகிறது. 106 நாட்கள் இருந்த மணிசந்திராவுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மாயாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.18 ஆயிரம் என்று தெரிகிறது. எனவே, 106 நாட்கள் இருந்து மாயாவுக்கு ரூ.19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், ஃபைனலிஸ்டில் இருந்து தினேஷ் மற்றும் விஷ்ணு எலிமினேட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!