பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் முழுவதும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்து போட்டியாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த வைத்தார்கள். 



கண்டித்த ஆண்ட்டி : 


அந்த வகையில் ரவீனாவின் குடும்பத்தில் இருந்து ரவீனாவின் அண்ணன் மற்றும் ரவீனா நெருங்கிய தோழியின் அம்மாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். ரவீனா சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு டோஸ் கொடுத்து விட்டு சென்றார், ரவீனாவை பார்க்க வந்த ஆண்ட்டி. மணியும் ரவீனாவும் காதல் ஜோடிகளாக வீட்டுக்குள் உலாவருவதன் எதிரொலியாக அவர்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மணியுடன் விளையாடுவதற்காகவா இந்த வீட்டுக்கு வந்த? அம்மா ஒத்துக்கிட்டாங்கன்னு வேற சொல்ற? அறைஞ்சிருப்பேன் அந்த அளவுக்கு கோபமா வருது" என ரவீனாவை கண்டித்ததுடன் மணியை அழைத்து எச்சரித்தார் ரவீனாவின் ஆண்ட்டி. 


ரவீனாவின் ஏக்கம் :


அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கடந்த வார டாஸ்க் எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது ரவீனாவின் குடும்பத்தில் இருந்து  வந்தவர்கள் கொடுத்த அட்வைஸ் பற்றி ரவீனா கூறுகையில் " அம்மா வருவாங்கன்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்களுக்கு உடம்பு சரியில்லை அதனால வரலை என சொன்னாங்க. என்னோட அண்ணனும், என்னோட பிரெண்டோட அம்மாவும் வந்ததுல எனக்கு சந்தோஷம்தான். எங்க அண்ணனை நான் இது வரைக்கும் தொட்டு கூட பேசியது கிடையாது. ஆனா அன்னிக்கு அவன் எனக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணான். கட்டி பிடிச்சு அழுதான். அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது".


அண்ணன் கொடுத்த அட்வைஸ் : 


"மணி கூட மட்டும் பேசாம வீட்ல இருக்க எல்லாரோடவும் நீ போய் பேசு. அப்போது தான் வீட்ல என்ன நடக்குது என உனக்கு தெரியும். உன்னோட விளையாட்டை நீ விளையாடு, அவங்க விளையாட்டை அவங்க விளையாடட்டும். உன்னால மத்தவங்களோட கேமும் ஸ்பாயில் ஆகிவிட கூடாது என அண்ணனும் ஆண்ட்டியும் சொன்ன அட்வைஸ் நான் எடுத்துக்குறேன்" என கூறியிருந்தார் ரவீனா.



ரவீனாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: 


அதன் தொடர்ச்சியாக இன்று ரவீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ரவீனாவின் அம்மா லதா ஸ்டோர் ரூமில் காத்திருந்தார். கமல் சார் ஸ்டோர் ரூம் சென்று பார்த்ததும் அங்கே அவருக்காக காத்திருந்த தன்னுடைய அம்மாவை பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் ரவீனாவின் அம்மாவை பார்த்ததும் மணியின் முகம்தான் பயத்தில் மாறிவிட்டது. 


அட்வைஸ் கிடையாது: 


மிகவும் அன்புடன் அனைவருடனும் பழகிய ரவீனாவின் அம்மா ரவீனாவுக்கு எந்த ஒரு கண்டிஷனும் போடவில்லை.. அட்வைஸும் கொடுக்கவில்லை. யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் விளையாடு, யாரையும் காயப்படுத்தாதே என்பதை மட்டும்தான் மகளிடம் அவர் சொன்னாரே தவிர மணி பற்றி ஒரு வார்த்தை கூட ரவீனாவிடம் பேசவில்லை. மிகவும் கூலாகவும், அமைதியாகவும் வந்து சென்றார் ரவீனாவின் அம்மா. இந்த சர்ப்ரைஸை சற்றும் எதிர்பார்க்காத ரவீனா அந்த சந்தோஷத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தார்.