பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனாவை அவரது குடும்பத்தினர் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. 


சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துவிட்ட நிலையில் தற்போது 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  7வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்நிகழ்ச்சி இதுவரை 81நாட்கள் நிறைவு செய்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அதன்பிறகு ஒரு மாதம் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் 5 பேர் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


கடந்த வாரம் அனன்யா ராவ் மற்றும் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி சந்திரா, ரவீனா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா,நிக்ஸன் ஆகிய 10 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதனிடையே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொருவர் குடும்பத்தினரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்து இதுநாள் வரை போட்டியாளர்களின் செயல்பாடுகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும், வெளிப்படையாக பாராட்டுகளை தெரிவித்தும் வருகின்றனர். 






இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரவீனா குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். அவர்கள் ரவீனாவிடம், "உன்னை அறைஞ்சிருப்பேன். உன்மேல எனக்கு அவ்வளவு கோபம் இருக்கு. அம்மா எல்லாத்துக்கு ஒத்துக்கிட்டார்களா? - எல்லார்கிட்டேயும் போட் அம்மா ஒத்துகிட்டாங்கன்னு சொல்லிகிட்டு இருக்க?. மணிக்காக விளையாட நீ இங்க வரல. இது நமக்கு தேவை கிடையாது. 


தொடர்ந்து மணி சந்திராவிடம் சென்று, ‘நீ என்னை அடையணும்னா, உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணு’ன்னு சொன்னீயே, தனியா உட்கார வச்சு பேசவா இந்த ஷோவுகு வந்துருக்கீங்க. தயவு செஞ்சு அவளை தனியா கூப்பிட்டு வச்சி பேசாதப்பா’ என தெரிவிக்கிறார்கள். நடுவில் மணி சந்திரா விஷ்ணு விஜய்யிடம், ‘என்னை திட்டுனா கால்ல விழுந்துட வேண்டியது தான்’ என தெரிவிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.