பிக் பாஸ் வீட்டில் மணி சந்திரா மற்றும் ரவீனாவை சக போட்டியாளர்கள் கார்னர் செய்து வருகிறார்கள். அதை காரணமாக காட்டி மணியை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மணியும் ரவீனாவும் பேசிக்கொள்ளும் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றுமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆறு சீசன்களாக விறுவிறுப்புக்கு குறைவின்றி ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, அனன்யா, வினுஷா, பவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, பூர்ணிமா ரவி, விசித்ரா, அக்ஷயா, மணி, விஜய் என 18 பேர் பங்கேற்றனர்.
வெளியேறிய போட்டியாளர்கள்:
அதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற அடுத்த இரண்டு நாட்களில் பவா செல்லதுரை உடல் நிலையை காரணம் காட்டி வீட்டில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
ஓபன் நாமினேஷன் :
பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர். இந்த நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் மணியிடம் ரவீனா பேசி கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியான இன்றைய ப்ரோமோ:
"வரவர கண்டுக்கவே மாட்டேங்குறீங்க... பேச மாட்டேங்குறீங்க...நானா ஏதாவது வந்து பேசுனாலும் அப்படி போயிடுறீங்க..." என மணி ரவீனாவிடம் சொல்ல "என்ன பிரச்சனை உங்களுக்கு?" என்கிறாள் ரவீனா. "இந்த வீட்ல நான் லோ ஆனா ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் லோ ஆவேன் வேற எந்த விஷயத்துக்கும் நான் லோ ஆகமாட்டேன் என உனக்கு நல்லா தெரியும். என்னை அவாய்ட் பண்ற மாதிரியே ஒரு ஃபீல் வருது. ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணறது என்னுடைய தப்பு. நீ எனக்கு அட்டென்ஷன் குடுக்கலைனாதான் எனக்கு காண்டாகுது. இது பொசஸிவ் கிடையாது" என மணி கூற இப்படியாக அவர்களின் உரையாடல் இந்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
சீசன் 7 லவ் பேர்ட்ஸ் :
ஒவ்வொரு சீசனிலும் சண்டைகள் சச்சரவுகள் எப்படி பிக்பாஸ் வீட்டில் ஒரு அங்கமோ அதே போல காதல் ஜோடிகள் மலர்வதும் சகஜமே. அப்படி இந்த சீசன் லவ் பேர்ட்ஸ்களாக வளம் வருகிறார்கள் ரவீனா - மணி ஜோடி. இவர்கள் இருவருமே அவரவர்களின் விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை என்பது சக போட்டியாளர்களின் கருத்தாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பாசிட்டிவாக விளையாடுகிறார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.