சூடுபிடித்த பிக்பாஸ் போட்டி:


பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 97வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்னும் சில நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து, இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றிக் கொள்ளப்போகும் போட்டியாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே உள்ளிட்ட அதிரடி டாஸ்க்குகள்  அடுத்தடுத்து நடந்த நிலையில், அதில் கடுமையாக விளையாடி போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்தனர். 


தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ் என 8 போட்டியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 8 போட்டியாளர்கள் இறுதி வாரத்துக்கு முந்தைய வாரத்தில் தொடர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 8 போட்டியாளர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம். போட்டியாளர்கள் எடுக்காமல் தவிர்க்க தவிர்க்க பணத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும்.  ஒரு லட்சம் ரூபாய் உடன் இந்த பணப்பெட்டி  பிக்பாஸ் வீட்டின் மத்தியில் திறந்துவைக்கப்பட்டது. 


16 லட்ச ரூபாயை தட்டி தூக்கிய பூர்ணிமா:


இந்த நிலையில், இன்று 10 லட்சத்திற்கு மேல் பணம் மதிப்பு உயர்த்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் யார் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போவார்கள் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களுக்குள்ளே பில்டப் கொடுத்ததன் காரணமாக யாரும் பணத்தை எடுக்க முன்வரவில்லை. 


இருப்பினும், மணி, மாயா, பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏனென்றால், அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் டைட்டிலை ஜெயிக்கலாம் என்று நம்பிக்கையோடு இருந்தனர்.


விசித்ரா தன்னுடைய கேரியரில் இந்த பணத்தை பார்த்துவிட்டதாக கூறியிருந்தார். எனவே, மணி, மாயா, பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துச் செல்ல வாய்ப்பு இருந்தது.  இந்த நிலையில், ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


பணப்பெட்டி டாஸ்க்கின் ஆரம்பத்தில் இருந்தே, பணத்தை எடுத்துச் செல்வதாகவே கூறிக் கொண்டு இருந்தார் பூர்ணிமா. "இந்த பணம் என்னுடைய சம்பளத்தில் பாதி கூட இல்லை" என்று சொல்லிக் கொண்டிருப்பதோடு, இதுபற்றி மாயாவிடமும் பலமுறை டிஸ்கஸ் செய்திருந்தார். மேலும், இந்த வாரம் எலிமினேட் ஆகுவதாகவும் நினைத்து நேற்று அழுதும் இருக்கிறார்.  


இந்த நிலையில், ரூ.16 லட்சத்தை சாமர்த்தியமாக எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், பூர்ணிமா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்து இருக்கிறார். இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  இருப்பினும், எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Bigg Boss 7Tamil Promo:டைட்டில் வின்னராக பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டும் விசித்ரா - அர்ச்சனா! .. காரணம் ஏன் தெரியுமா?