விஜய் டிவியில் இன்று பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான நாள் முதல் யாரெல்லாம் கன்டெஸ்ட்டன்டாக வர போகிறார்கள் என யூகங்கள் தொடங்கி,  கடைசி நிமிடம் வரை இருந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் தான் கன்டஸ்டன்ட்ஸ் எனக் கூறப்பட்ட பட்டியலில், ஒரு சிலர் இந்தப் பட்டியலில் இருந்து எஸ்கேப்பாகியுள்ளனர். இந்த நிலையில் இதுவரை யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம்!

கூல் சுரேஷ் :

 

சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் வெறித்தனமான ரசிகர் என்றால் அது கூல் சுரேஷ் தான். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் திரைப்படங்களை வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதன் மூலம் பிரபலமாகி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். கூல் சுரேஷ் இருக்க கண்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது!

பூர்ணிமா ரவி :

 

   

ஐடியில் வேலை செய்பவர் மற்றும் நடனக் கலைஞரான பூர்ணிமா ரவி, நரிக்கூட்டம் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். ஒரு சில ஷார்ட் பிலிம்களில் கூட நடித்துள்ளார். ஆராத்தி என்ற யூடியூப் சேனல் மூலம், அடிங்க.. அராத்தி.. டைலாக் மூலம் பிரபலமானவர்.

ரவீனா தாஹா :

 

 

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள ரவீனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மௌன ராகம் 2' சீரியல் மூலம் பிரபலமானவர். குக் வித் கோமாளி சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் கோமாளியாக கலக்கியதன் மூலம் பிரபலமானவர்.  

பிரதீப் ஆண்டனி :

 

நடிகர் கவினின் நண்பர், அருவி படம் மூலம் அடையாளம் பெற்றவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. வாழ், டாடா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

நிக்சன் :

நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் இருந்தும் வந்துள்ள இசைக்கலைஞர் மற்றும் ராப்பரான நிக்சன், விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒத்தைத் தாமரை... என்ற பாடலின்  வரிகளை எழுதியவர் நிக்சன். பின்னர் அவரே பாடல்களை பாடவும் தொடங்கியுள்ளார். 

வினுஷா தேவி : 

பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாதியில் கண்ணம்மாவாக என்ட்ரி கொடுத்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் வினுஷா தேவி. அதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2 சீசனிலும் நடித்து இருந்தார். 

 

மணி சந்திரா :

நடன கலைஞராக இருந்த மணி சந்திராவுக்கு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் சிஷ்யன் மணி சந்திராவுக்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.  

 

அக்ஷயா உதயகுமார் :

லவ் டுடே படத்தில் நடித்த இவனாவின் தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் அக்ஷயா உதயகுமார். நடன கலைஞராக இருக்கும் அக்ஷயா சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவர்.  

 

ஜோவிகா விஜயகுமார் :

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை துவங்குகிறார். நடிகையாக வேண்டும் என்ற தனது கனவை இந்த நோக்கி தனது ஜார்னியை துவக்கி உள்ளார்.

 

ஐஷு : 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீர் வளர்ப்பு குடும்பமான அஷ்ரப்பின் மகள் தான் ஐஷு. இவர் சிறந்த நடன கலைஞராக இருக்கிறார்.   

 

 

விஷ்ணு விஜய் : 

ஆபிஸ் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் விஷ்ணு விஜய். அதை தொடர்ந்து சத்யா சீரியல் ஹீரோவாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்பதே அவரின் ஆசை. இந்த பிக் பாஸ் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்ப்பு உள்ளது. 

 

மாயா கிருஷ்ணன் :

மாடல் அழகியான மாயா கிருஷ்ணன் விக்ரம் திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் பிரபலமானவர். சிறு வயது முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மாயா தொடரி, மகளிர் மட்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

சரவணா விக்ரம் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பியான கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சரவண விக்ரம். 

 

யுகேந்திரன் :

பழம்பெரும் பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். இவரும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமானவர். 

 

விசித்ரா: 

90'ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்த  நடிகை விசித்ரா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட பின்னர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பாக சமையல் திறமையை நிரூபித்து மூன்றாவது இடத்தை பெற்றார். 

பவா செல்லதுரை :

மிகவும் பிரபலமான சிறுகதை எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுக்கிறார். இவரின் எழுத்தை தாண்டியும் குரல் வளத்திற்கு மிக பெரிய வலிமை உள்ளது. தனது கதைசொல்லும் திறனால் ரசிகர்களை கட்டி போட்டவர்.

அனன்யா ராவ் : 

மாடலிங் துறையை சேர்ந்த அனன்யா ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.   

விஜய் வர்மா : 

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் முதல் நாள் என்ட்ரியில் கடைசி போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்தவர் விஜய் வர்மா. இவர் ஒரு தேர்ந்த நடன கலைஞர். ஜிம்னாஸ்டிக் மற்றும் பாக்ஸிங் பயிற்சியை முறையாக கற்று தேர்ந்தவர். தன்னுடைய திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய் வர்மா.