தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. 85 நாட்களைக் கடந்த இந்த போட்டியில் வீட்டிற்குள் இன்னும் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.  இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.


பிக்பாஸ் சீசன் 7 தமிழ்:


இதில் கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். 


இந்நிலையில் 7 பாயிண்ட்டுகள் பெற்று, விஷ்ணு டிக்கெட் டு ஃபினாலே புள்ளி பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.  மணி, ரவீனா, தினேஷ் இரண்டு பாயிண்ட்டுகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளனர்.  மேலும், இன்றைக்கு கடைசி டிக்கெட் டூ ஃபினாலே நடைபெறுகிறது. இந்த போட்டியில் தான் யார் முதலில் ஃபினாலேவுக்கு செல்வார் என்று தெரியவரும். 


நிக்சன்-பூர்ணிமா விவகாரம்:


இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே பூர்ணிமா, நிக்சன் செய்யும் விஷயங்களை சக போட்டியாளர்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது, இருவரும் சேர்ந்து இந்த வாரம் நடனமாடியதை சக போட்டியாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.


மேலும், வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுக்கு இவர்கள் இருவரும் நடனமாடிய வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவியது. இதற்கு பலரும் , ”அக்கா, தம்பி என்று சொல்லிவிட்டு இப்படியா நடந்து கொள்வீர்கள்?” என்று திட்டி வருகின்றனர். மேலும், "ஐஷூவுக்கு அடுத்தது இப்போ பூர்ணிமாவா?” என்று பலரும் விமர்சித்தனர்.  


நிக்சன் தந்த விளக்கம்:






இந்த நிலையில்,  இதற்கு பதிலளிக்கும் விதமான ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நிக்சன் பேசுகையில், "டான்ஸ் ஆடினாலே கலாய்க்கிறாங்க. அக்கா தம்பி உறவைப் பற்றி இப்படியா பேசுவாங்க. நாம இங்க எண்டர்டெயின்மெண்ட் பண்ணத்தான் வந்திருக்கோம். எனக்கு தெரிந்த டான்ஸ், பாட்டு பாடுறது இதையெல்லாம்தான் நான் பண்ணிட்டு இருக்கேன். இதை வைத்து கலாய்சிட்டு இருக்காங்க. இனிமே டான்ஸ் பண்ண வேண்டாம்" என்றார். 


இதைத் தொடர்ந்து பூர்ணிமா பேசுகையில், "முதலில் என்னையும் (பூர்ணிமா), விஷ்ணுவையும் கலாய்த்தாங்க. இப்போ, உன்னையும் (நிக்சன்), என்னையும் கலாய்க்கிறாங்க. முற்பகல் செய்யும், பிற்பகல் விளையும். இந்த ஊரில் அக்கா,  தம்பி என்றெல்லாம்  இல்லை.  கலாய்க்கணும் என்றால் எல்லாரையும் கலாய்ப்பாங்க" என்றார்.