பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் எங்கிருந்து யார் மூலமாக பிரச்சினை வெடிக்கும் என்பதே தெரியவில்லை. கடந்த ஆறு சீசன்களாக இல்லாத ஒரு போக்கு தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 சீசனில் அரங்கேறி வருகிறது. 


கன்டென்ட் தான் பிரதானம் :


கன்டென்ட் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. கண்டென்ட்டுக்காக நான் இதை செய்தேன், அதை செய்தேன் என அவர்கள் செய்யும் சில செயல்களுக்கு எல்லாம் கன்டென்ட்டுக்காக என அரிதாரம் பூசி விடுகிறார்கள். அவர்கள் தெரிந்தே சில அபத்தமான வேலைகளை யுத்தியாக பயன்படுத்துகிறார்கள். 


 



மாயாவின் குற்றச்சாட்டு :


அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் ப்ராசஸ் முடிந்த பிறகு மாயா புதிதாக ஒரு குண்டை தூக்கி போட்டார். அதாவது மணி சந்திரா தன்னுடைய சாதியைப் பற்றி பேசியதாக ஐஷுவிடம் கூறுகிறார் மாயா. மணி மாயாவின் சாதி குறித்து பேசுவது போன்ற எந்த ஒரு கிளிப்பிங்கும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை என்பதால் இது குறித்து ரசிகர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது. 


ஓபன் நாமினேஷன் :


இந்த சீசன் முதல் ஓபன் நாமினேஷன் துவங்கியதும் முதலில் அதை துவங்கி வைத்தார் விஷ்ணு. விசித்திராவை பற்றி பிரதீப் ஒருமையில் பேசிய பிரச்சினையை சுட்டிக்காட்டி அவரை நாமினேட் செய்தார். அவரைத் தொடர்ந்து வந்த சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு நபர்களை நாமினேட் செய்தனர். அந்த வகையில் நிக்சன், பிரதீப், ஜோவிகா, யுகேந்திரன், அக்ஷயா, மணி, யுகேந்திரன், மாயா, விக்ரம், விஷ்ணு உள்ளிட்டோர் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 


மணி கிளப்பிய சர்ச்சை :


இந்த நாமினேஷன் ப்ராசஸில் மாயா மணியை நாமினேட் செய்தார். அதற்கு காரணமாக “மணி ஒரு பிற்போக்குவாதி” என குறிப்பிட்டார். அதற்கு காரணம் முதல் நாள் மாயா சாப்பிடும் போது சிக்கன் கிரேவி மட்டும் ஊற்றிக்கொண்டு சிக்கன் வேண்டாம் என சொன்னதால், நீ அந்த சாதியா என ஒரு சாதியைக் குறிப்பிட்டு மணி பேசியுள்ளார்.


அதற்கு மாயா, “இப்படி எல்லாம் பேசாதே, அது ரொம்ப தப்பு” என அப்பவே கண்டித்துள்ளார். இந்தக் கதையை மணி ஜோவிகாவிடம் தானாகவே ஏற்கெனவே விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதைக் காரணமாக வைத்து தான் மாயா மணியை பிற்போக்குவாதி என மறைமுகமாக குறிப்பிட்டு நாமினேட் செய்துள்ளார். இது வரையில் எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் இல்லாத வகையில், இந்த சாதி குறித்த குற்றச்சாட்டு இந்த சீசனில் எழுந்துள்ளது. இந்த பிரச்சினைக்கான தீர்வு வார இறுதி நாளில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்கு பெரும் எபிசோடில் விவாதிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.