விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த முறையும் சிறப்பாக கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். 


இந்த பிக் பாஸ் 7 சீசனில் 9 ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும் முதல் நாள் என்ட்ரி கொடுக்க இரு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விசித்ரா, சரவணா விக்ரம், ஐஷு, விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், யுகேந்திரன், விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், நிக்சன், அனன்யா ராவ்,  அக்ஷயா உதயகுமார், பாவா செல்லதுரை, மணி சர்மா, வினுஷா தேவி உள்ளிட்டோர் முதல் நாள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். 



 


கூல் சுரேஷ்:


முதல் கன்டெஸ்ட்டன்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஜோக்கராக என்ட்ரி கொடுத்துள்ளார் கூல் சுரேஷ். அவருக்கு 'சுரேஷ்' என பெயர் பொறிக்கப்பட்ட ஒரு செயின் பரிசளித்துள்ளார் கமல்ஹாசன்


கூல் என்பது பின்னர் உங்கள் பெயரோடு சேர்க்கப்பட்ட ஒரு பெயர் இல்லாமல், உங்களின் பெயரை அடையாளப்படுத்தும் வகையில் 'சுரேஷ்' என்ற எழுத்து கொண்ட இந்த செயின் என்னுடைய பரிசு.     


 



பூர்ணிமா ரவி:


இரண்டாவது கன்டெஸ்ட்டாக என்ட்ரி கொடுத்துள்ள பூர்ணிமா ரவிக்கு பரிசாக விசில் கொடுத்துள்ளார். “அதுக்கு என்ன அர்த்தம் என்பது வீட்டுக்குள் போனால் தெரியும்” என சொல்லி ட்விஸ்ட் கொடுக்கிறார்.   


 



ரவீனா தாஹா:


மூன்றாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா தாஹாவுக்கு பட்டர்பிளை ரிங் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரவீனா ஒரு பட்டர்பிளை போல இருக்கவேண்டும் என்பதற்காக இது வழங்கப்பட்டுள்ளது. 


 



பிரதீப் ஆண்டனி :


நான்காவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ள பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 


 



நிக்சன் :


ஐந்தாவது போட்டியாளர் நிக்சனுக்கு 'யூ ஹேவ் யூ' என பொறிக்கப்பட்டுள்ள முகம் பார்க்கும் கண்ணாடி. விமர்சகரும் நீங்கள் தான் பார்வையாளரும் நீங்கள் தான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. 


 



வினுஷா தேவி :


ஆறாவது போட்டியாளராக பிக் பாஸ் 7 வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள வினுஷா தேவிவுக்கு கருப்பு வைரம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறம் ஒரு பொருட்டல்ல என்பதற்கு உதாரணமாக இது அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. 


 



 


மணி சந்திரா :


ஏழாவது போட்டியாளராக என்ட்ரி கொடுள்ள ராப்பர் மணி சந்திராவுக்கு குருநாதா கோட் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது.  


 



அக்ஷயா உதயகுமார் :


அடுத்த போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ள அக்ஷயா உதயகுமாருக்கு கற்றாழை பரிசாக கிடைத்தது. கூல்லான ஒரு இடத்தில் இருந்து வருவதால் பிக் பாஸ் வீட்டையும் குளுமையாக வைத்து இருக்க வேண்டும் என நோக்கத்தில் இந்த பரிசு வழங்கப்பட்டது. 


 



ஜோவிகா விஜயகுமார் :


வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு பரிசாக தாய் செய் உள்ள அழகான வால் பிஸ் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 



ஐஷு :


அடுத்த போட்டியாளர் ஐஷுவுக்கு A லெட்டர் கொண்ட ஜாக்கெட் பரிசாக பெற்றார். 


 



விஷ்ணு விஜய் :


சின்னத்திரையின் பிரபலமான நடிகருக்கு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக பெற்றார் விஷ்ணு விஜய். 


 



மாயா கிருஷ்ணன் :


ஜோக்கர் போல வெகுளியாக இருக்கும் மாயா கிருஷ்ணனுக்கு ஜோக்கர் ரெட் நோஸ் பால் பரிசாக கொடுக்கப்பட்டது. 


 



சரவணா விக்ரம் :


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனுக்கு வசதியாக கட்டப்பை கிஃப்ட்டாக வழங்கப்பட்டது. 


 



யுகேந்திரன் : 


பாடகர் மலேசியா வாசுதேவன் மகனும்  பின்னணி பாடகரான யுகேந்திரனுக்கு அவருடைய அப்பாவின் ஞாபகமாக மூக்கு கண்ணாடி பரிசாக வழங்கப்பட்டது. 



விசித்ரா:


90'ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்த விசித்ராவுக்கு பரிசாக சைக்காலஜி படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. 



பவா செல்லதுரை :


சிறந்த கதை சொல்லியும் பிரபலமான எழுத்தாளருமான பவா செல்லத்துரைக்கு அவரின் ஆற்றலை பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கும் பகிர்வதற்காக நோட்டு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.


 



அனன்யா ராவ் :


சிறந்த பரதநாட்டிய கலைஞரும், மாடலுமான அனனன்யா ராவுக்கு சலங்கை பரிசாக வழங்கப்பட்டது. 


 



விஜய் வர்மா :

இறுதி போட்டியாளரான நடன கலைஞர் விஜய் வர்மாவுக்கு பைக் பொம்மை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. விஜயின் தந்தை ஒரு மெக்கானிக்காக இருந்தவர். அவரின் ஞாபகமாக விஜய்க்கு பைக் டாய் பரிசளிக்கப்பட்டது.