வனிதாவின் செல்ல மகள்
பிக் பாஸ் சீசன் 7 இன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் 3வது சீசன் போட்டியாளராக ஏற்றி கொடுத்து நிகழ்ச்சியையே சூடு பிடிக்க வைத்தவர் வனிதா விஜயகுமார். அனைவரையும் பதறவைக்கும் ஒரு போட்டியாளராக கதிகலங்க வைத்த ஒருவர் என்றால் அது சந்தேகமில்லாமல் வனிதா விஜயகுமார் தான். அவரின் மகள் ஜோவிகா விஜயகுமார் இந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக என்ட்ரி கொடுக்கிறார்.
சமீபத்தில் தான் தனது 18வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஜோவிகா, அவரின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். “சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் தயாராகி விட்டாங்க” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இப்பவே அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவியுதாம். இதற்காகவே அவர் பிரத்யேகமாக ஆக்ட்டிங் ஸ்கூலில் பயிற்சி பெற்று வருகிறாராம்.
நம்பிக்கை கொடுத்த கமல்
அம்மாவைப் போலவே மகள் ஜோவிகாவும் சமையலில் கில்லாடி. அம்மா வனிதா தற்போது யூடியூப், பிசினஸ், நடிப்பு என பல விஷயங்களில் பிஸியாக இருப்பதால் அவரின் பிசினஸ் மற்றும் யூடியூப் சேனல் என அனைத்தையும் மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறார். பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுக்கும் ஜோவிகாவுக்கு மிகவும் ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.
படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாத ஜோவிகாவுக்கு நடிப்பின் மீது சிறு வயது முதலே ஈர்ப்பு அதிகம். மிகவும் பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு என்பதால், அது தானாகவே அவருக்குள் ஒட்டிக்கொண்டது. பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் என்ட்ரி கொடுத்துள்ள மிகவும் யங் கண்டஸ்டெண்ட் ஜோவிகா என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பான மகள்.. பிக் பாஸில் எப்படி?
ஒரு சிங்கிள் மதராக தனது அம்மா பட்ட துன்பங்களை நேரில் பார்த்து வளர்ந்த ஒரு மகள் என்பதால், அம்மாவின் சுமையை சற்று இறக்கி வைத்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என மிகவும் பொறுப்பான ஒரு மகளாக இருப்பதே தன்னுடைய கடமையாக நினைக்கிறார் ஜோவிகா விஜயகுமார்.
பிக் பாஸ் மேடை ஜோவிகாவின் திரைப்பயணத்துக்கு அடித்தளமாக அமையும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. பிக் பாஸ் வீட்டுக்குள் ஜோவிகா வனிதாவின் மறு உருவமாக இருப்பாரா அல்லது அம்மாவுக்கு நேர் எதிராக இருப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்!