பிக் பாஸ் சீசன் 7 இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாஸான ஒரு என்ட்ரியுடன் "நாயகன் மீண்டும் வரார்..." என்ற பின்னணி பாடலுடன் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
டூயல் ரோலில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். போன முறை இருந்ததை விடவும் மிகவும் சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது இந்த சீசன் செட். ஒரு கமல், எடக்கு முடாக்காக கேள்வி கேட்க, மற்றொரு கமல் கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறார்.