பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் சக போட்டியாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற விஷயங்களை தட்டிக் கேட்காமல் பெண்கள் சொன்ன ஒரு காரணத்துக்காகவே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 


இதனிடையே பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் சக போட்டியாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 






அதன்படி நேற்று விசித்ரா, கூல் சுரேஷ், மணி சந்திரா, விஜே அர்ச்சனா, தினேஷ், ரவீனா ஆகியோர் அமர்ந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேசிய ரவீனா, ‘பிரதீப் மைண்ட்ல என்ன பேசுனாலும் சரி, என்ன பண்ணாலும் சரின்னு இஷ்டத்துக்கு பேசுறான்’ என சொன்னார். இதற்கு பதில் சொன்ன விசித்ரா, ‘அவன் பேசுறப்ப நீங்க எல்லாரும் அதை ஆதரிச்சு சரின்னு தானே சொல்லிட்டு இருந்தீங்க. ஒரு மாசம் வரை யாரும் எதுவும் பேசலையே. வந்த 3வது நாள் நான் பிரதீப்பிடம் சண்டை போட்டுள்ளேன். ஆனால் உங்களுக்கு ஒரு மாசம் ஆச்சா?’ என எகிறினார். 


உடனே ரவீனாவிடம் விஜே அர்ச்சனா, ‘உன்கிட்ட தப்பா பேசுறான்னா அந்த வாரம் நடந்த நிகழ்ச்சியிலேயே உரிமைக்குரல் எழுப்பியிருக்கலாமே?’ என கிடுக்குப்பிடி கேள்வியை முன்வைத்தார். அதற்கு, ‘பிரதீப் சீரியஸா எல்லாம் தப்பா பேச மாட்டான். சிரிச்சி பேசிட்டு இருக்கும்போதே எதாவது ஒன்னு சொல்லிடுவான். அதை புரிஞ்சிக்கவே கொஞ்சம் நேரம் ஆகும்’ என ரவீனா பதில் சொல்ல, அப்ப நீங்க புரிஞ்ச அந்த வாரத்திலேயே பேசிருக்கணும் என விஜே அர்ச்சனா பதில் சொன்னார்.


தொடர்ந்து பேசிய ரவீனா, ‘பிரதீப் சரியா பேசவில்லை என கமல் சார் பலமுறை தெரிவித்தார். ஆனால் அவன் திரும்பவும் அதைத்தான் பண்றான் என சொன்னார். இதற்காக பேசிய விசித்ரா, ‘நீங்க கூல் சுரேஷ் விஷயத்தை பேசுறன்னு அப்படியே திசை திருப்பி பெண்கள் பாதுகாப்புன்னு ஒரு விஷயத்தை முன் வச்சி பிரதீப்பை வீட்டை விட்டு அனுப்பிட்டீங்க. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சொன்னார். 


அடுத்ததாக பேசிய ரவீனா, ஃபுட்பால் விளையாட்டு விளையாடும் போது பூர்ணிமா தான் நடுவராக இருந்தார். அப்போ பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டுல தான் இருந்தார். பூர்ணிமா குனிந்து பந்தை எடுக்கையில் ரொம்ப குனியாதடி என சொல்லி ஆபாசமான கமெண்ட் ஒன்றை பிரதீப் சொன்னான். அதேபோல் ஷார்ட்ஸ் போட்டு உட்காரும்போது அப்படி ஒரு கமெண்ட் சொன்னார்’ என தெரிவித்தார். 


இதற்கு பேசிய தினேஷ், ‘முதல் வாரம் கூட்டப்போவது யாரு டாஸ்க்ல நிக்ஸன் தான் பெட்ரூமை கூட்டி சுத்தம் பண்ணிட்டு இருந்தாரு. அப்போது மாஸ்க் இருந்தா நல்லாருக்கும்ல என பூர்ணிமா, மாயாவிடம் சொன்னார். உடனே மாயா, தன் பெட்டில் இருந்த உள்ளாடையை எடுத்து காட்டினாள். அதை பூர்ணிமா தடுக்க, பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் என நக்கலாக மாயா சொன்னாள். பிரதீப் பண்ணது தப்புன்னா, இவங்க பண்ணதை எல்லாம் என்ன சொல்ல?’ என தெரிவிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. 
=============