Bigg Boss 7 Tamil: ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக விசித்ரா இன்று பேசிய சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


பிக்பாஸ்:


கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசனில் முதலில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.


தற்போது டான்சர் ஐஷூ,சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டனர். 


தொடர்ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் பாடகர் கானா பாலா, பட்டிமன்றப் பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். 5 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா தேவி, விஜய் வர்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.


இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே சவால் மிகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த பிரதீப் நேற்று முன்தினம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு சோஷியல் மீடியாவில் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. 


பிரதீப்புக்கு நடந்த அநீதியை பேசிய விசித்ரா!


இந்நிலையில், ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக விசித்ரா இன்று பேசிய சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, "பிரதீப் கெட்ட வார்த்தைகளை பேசினார். எந்த நேரத்தில் எப்படி பேசணும் என்பது அவருக்கு தெரியவில்லை. ஆனா கெட்டவன் கிடையாது. இங்குள்ள பெரும்பாலானோர் பாதுகாப்பு இல்லை என்று கூறினர்.


அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடன் பழகியதை பொறுத்தவரை, சில வார்த்தைகளை வரம்பு மீறி பிரதீப் பேசி இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு இல்லை என்று பெரிய குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டேன். அவருக்கு கண்ணியமாக நடந்துக் கொள்ள தெரியவில்லை. அது தான் அவரோட பிரச்னையாக இருக்கிறது. இதுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. 


இந்தக் குற்றச்சாட்டை எல்லாரும் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால ஒருத்தனோட வாழ்க்கையே போச்சு. குறிப்பாக ஐஸ்வர்யா, நிக்சன். இவர்கள் orthodax family-ல இருந்து வந்தோம் என்று சொல்கிறார்கள். ஆனா, எந்த நேரமும் ஒன்றாக அமர்ந்து தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த culture எனக்கு என்னென்னு சுத்தமாக புரியவில்லை.


எல்லாரும் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் அதை நிறைய முறை பார்த்திருக்கேன். பிரதீப் கிட்ட பாதுகாப்பு இல்லை என்று சொல்லுறவங்க பிரதீப்புடன் ஏன் இரவு முழுவதும் பேசிக் கொண்டு இருக்கனும்? இப்படி இருக்கும்போது பிரதீப் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைப்பது ஏற்றுக் கொள்ள  முடியாது. பிரதீப் அப்படி பேசி இருந்தால் கண்டிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் விசித்ரா.