பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் 5வது நாளுக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விசித்திரா மற்றும் ஜோவிகா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விசித்திரா திரும்ப திரும்ப ஜோவிகாவின் படிப்பை பற்றியே பேசுவது மிக பெரிய சண்டையாக வெடிக்கிறது. 


கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே ஜோவிகாவின் படிப்பு குறித்து சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது ஜோவிகாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எத்தனையோ முறை அதை எடுத்து சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி பேசப்படுவது பிடிக்காமல் உள்ளேயே குமுறிக்கொண்டு இருந்த ஜோவிகா வெடித்து தள்ளிவிட்டார்.   


 



"நான் டாக்டரா இன்ஜினியரா ஆகுறேன்னு சொல்லவே இல்லை" என விசித்திரா சொல்ல "போய் குறும்படம் கூட போட்டு பாத்துக்கோங்க... பேஸிக் நீ பன்னிரெண்டாம் வகுப்பாவது படிச்சு தான் ஆகணும் என என்னை தான் சொன்னாங்க" என முகத்திற்கு நேராக கையை காட்டி பேசுகிறார் ஜோவிகா.


"இதுல என்ன தப்பு இருக்கு? உங்க அம்மா சொல்றது இல்லையா" என விசித்திரா கேட்க "உங்களுக்கு தெரியாது எங்க பேமிலி காம்ப்ளிகேஷன்ஸ் என்ன இருக்குனு. எங்க அம்மாவை தான் நான் மம்மின்னு கூப்பிடுவேன். எங்க அம்மா சொன்ன நான் கேட்டுப்பேன். அது எனக்கு போதும். இந்த ஷோக்கு நான் தான் வந்தேன். என்னோட தாத்தாவோ, பாட்டியோ, அம்மாவோ, அப்பாவோ வரல. நான் தான் வந்தேன். என்னை பத்தி பேசுறதுனா பேசு. என்னோட பேக் கிரவுண்ட் பத்தி நீ பேசாத" என பொரிந்து தள்ளிவிட்டார் ஜோவிகா. 


ஜோவிகாவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு ஹவுஸ் மேட்ஸ் பலரும் கைதட்டி ஆதரித்தனர். ஜோவிகா இப்படி பேசுவார் என சற்றும் எதிர்பார்க்காத விசித்திரா அப்படியே மலைத்து போய் நிற்கிறார். 


 



விசித்திரா, யுகேந்திரன் உள்ளிட்டோர் ஜோவிகா மீது இருக்கும் அக்கறையால் திரும்ப திரும்ப படிப்பைப் பற்றி பேசினாலும் அது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை விட, வரவில்லை என்பதை அவரே வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் போது மேலும் மேலும் அதையே பேசி சங்கடப்படுத்துவது நியாயமில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.


 



ஒரு நிமிடம் கண்முன்னே அப்படியே வனிதா வந்து போனது போல இருந்தது. மிகவும் துணிச்சலாக தனது மனதில் பட்டதை தைரியாக பேசிய ஜோவிகாவுக்கு கைதட்டல்கள் கிடைத்தன. வயதில் சிறியவர் என்றாலும் அவர் எடுத்து வைக்கும் பாய்ண்ட் மிகவும் மெச்சூர்ட்டாக இருக்கிறது என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து.  


இத்துடன் ஜோவிகா படிப்பு பற்றின விஷயம் நிறுத்தப்படுமா, இல்லை இது மேலும் பூதகரம் எடுத்து வெடிக்குமா என்பதை பொறுத்து இருந்து வரும் நாட்களில் பார்க்கலாம்!


ALSO READ: 800 Movie Review: முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! 800 படத்தில் கறைந்தது ரசிகர்களின் மனமா..? பணமா..? ஒரு டி20 விமர்சனம்!