பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் திடீர் போராட்டம் நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நடப்பு சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பலரும் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல் விஜய் டக்கர், விஜய் சூப்பர் ஆகிய சேனல்களிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இவர்களில் கூல் சுரேஷ் தான் பிக்பாஸ் வீட்டின் மிகப்பெரிய எண்டெர்டெயினராக உள்ளார். பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் யார், யார் எப்படி என்பதை கணிப்பதில் வல்லவராக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். உள்ளே சென்ற பிறகு “வெந்து தணிந்தது காடு.. பிக்பாஸூக்கு வணக்கத்தைப் போடு தொடங்கி எதற்கெடுத்தாலும் தமிழன் டா என கூவியது வரை தினம் தினம் மீம் மெட்டீரியலாக வலம் வருகிறார் கூல் சுரேஷ்.
இப்படியான நிலையில் உள்ளே வந்த முதல் நாள் பவா செல்லதுரை சொன்ன கதையைக் கேட்டு கண்கலங்கி அழுத வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகியது. சக போட்டியாளர்களிடம் மொக்கை ஜோச் சொல்லி வாங்கி கட்டுவது..பாடல் பாடுவது என சமூக வலைத்தளங்கள் எங்கும் கூல் சுரேஷ் ராஜ்ஜியம் தான். இப்படியான நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் மூக்கில் இருபக்கமும் மூக்குத்தி மாட்டிக் கொண்டு வரும் கூல் சுரேஷ் சக போட்டியாளர்களுடன் சென்று கேமரா முன்பு நிற்கிறார்.
இரண்டு மூக்குத்தியில் எது நன்றாக இருக்கிறது என பிக்பாஸ் கேமரா வழியாக பதில் சொல்ல வேண்டும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் எந்த வித ரியாக்ஷனும் வராததால் உடனே எல்லாரும் அமர்ந்து போராட்டம் நடத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Promo: "படிச்சி தான் பெரிய ஆள் ஆகணுமா?” .. வனிதாவாக மாறி விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா..!