விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக நாளுக்கு நாள் ஏகப்பட்ட ட்விஸ்டுடன் களைகட்டி வருகிறது பிக்பாஸ் வீடு. கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டையும் சச்சரவுமாக மோதல் காதல் என படு என்டர்டெயினிங்காக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 7.



45வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியானதில் இந்த வார தலைவர் தினேஷுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் கடுமையான சண்டை உச்சக்கட்டத்தை தொட்டது. அடிதடி மட்டும் தான் நடக்கவில்லையே தவிர வாய் தகராறு முற்றிய நிலையில் என்ன நடக்கிறது என புரியாமல் திகைத்து பார்த்து கொண்டு இருந்தனர் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள். வாடா போடா பொறுக்கி என்றெல்லாம் வார்த்தைகள் தடிக்க சண்டை படு மோசமாக இருந்தது. இது அனைத்திற்கும் காரணம் பிக் பாஸ் தினேஷுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் தான். அது என்ன என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும். 


அதன் தொடர்ச்சியாக இன்று 45வது நாளுக்கான 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விசித்திரா மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறார். அவர் வயதில் மூத்தவர் என்பதால் ஒரு தாய்மை குணம் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. அதனால் அதை பல ஹவுஸ்மேட்ஸ்கள் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அதனால் மனம் நொந்து பேசியுள்ளார் விசித்திரா. 


 




"நான் அம்மாவாக நடிக்கவில்லை. நடிக்கவும் முடியாது, விக்ரமை பார்க்கும்போது என்னுடைய பையனை பார்ப்பது போல இருக்கும். அதை கிண்டல் பண்ணி சீப்பா டிராமானு பேசுறது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என்னை விசித்திரா மேம் என கூப்பிடுங்க. மரியாதையாக அழைக்க நான் தகுதியானவள். என்னை மாதிரியே 50 வயசுல நிறைய பேர் எதுவுமே இல்லாமல் இருக்கிறாங்க. அதனால நான் இப்போ விட்டுக்கொடுத்துட்டு இந்த கேமை விட்டு வெளியில் போனால் அதுவே ஒரு தவறான உதாரணமாக போய்விடும்" என விசித்திரா மிகவும் பொறுமையாக தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்கிறார். 


இதைக் கேட்ட பூர்ணிமா "விசித்திரா மேம்... நீங்களும் இனிமே என்னை பூர்ணிமா மேம் என கூப்பிடுங்க" என சொன்னதும் உடனே மாயாவும் "எனக்கும் நீங்க இனிமே மரியாதை குடுங்க விசித்திரா மேம்" என சொல்கிறார்.


 



என்னதான் கேம் ஷோவாக இருந்தாலும் அடிப்படை மரியாதை என்பது மிக மிக அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி கெட்ட வழியில் தூண்டுகோலாக இருந்துவிட கூடாது. 


விசித்திரா மிகவும் வருத்தப்பட்டு பேசுகையில் பூர்ணிமாவும் மாயாவும் அவரை கிண்டல் செய்வது போல பேசியது அவரின் எமோஷனை காயப்படுத்துவது போல இருந்தது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


ஆகவே இன்றைய பிக் பாஸ் எபிசோடில் அடிதடி, சண்டை, மோதல், எமோஷன் என பல ஸ்வாரஸ்யங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.