✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bigg Boss 7 Tamil: விஷ்ணுவை கெட்ட வார்த்தை பேசி ட்ரிகர் செய்த தினேஷ்.. கலவரமான பிக்பாஸ் வீடு..

லாவண்யா யுவராஜ்   |  15 Nov 2023 01:18 PM (IST)

Bigg Boss 7 tamil : ப்ரோமோ பொறுக்கி என விஷ்ணுவை டார்கெட் செய்து கடுப்பேத்திய தினேஷூக்கு பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்ன? அனல் பறக்க வெளியான இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ!

பிக் பாஸ் 7 தமிழ் - ப்ரோமோ 2

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரபரப்பு எகிறி வரும் நிலையில் இன்று 45வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நாளுக்கு நாள் சண்டையும் சச்சரவும் அதிகரித்து வரும் பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலர் எவிக்ஷனை நினைத்து கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், இன்னும் ஒரு சிலர் எகிறி கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் விஷ்ணு - அக்ஷயா இடையே பிரச்சினை நடைபெற இன்று விஷ்ணுவுக்கும் இந்த வார கேப்டன் தினேஷுக்கு சண்டை முற்றுகிறது. இந்த பிரச்சினை வெடிக்க முக்கியமான காரணம் பிக்பாஸ். ஏன் என்றால் அவர் தான் தினேஷை அழைத்து சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுக்க அதன் படி ஹவுஸ் மேட்ஸ்களிடம் சிடுசிடுவென தினேஷ் பேச அதனால் விஷ்ணு ட்ரிக்கர்ராகிவிட்டார். 

 

இன்று வெளியான பிக்பாஸ் முதல் ப்ரோமோவிலேயே தினேஷ் - விஷ்ணு இடையே சண்டை முற்றிப்போக தற்போது 2வது ப்ரோமோ பட்டையை கிளப்பும் வகையில் வெளியாகி உள்ளது. 

தினேஷ் விஷ்ணுவை ‘ப்ரோமோ பொறுக்கி’ என அழைக்க விஷ்ணு டென்ஷனாகிறார். "என்ன ப்ரோமோ பொறுக்கியா? பொறுக்கி கிறுக்கின்ன வேற மாதிரி ஆகிடுவ நீ" என கையை காட்டி தினேஷை மிரட்ட மீண்டும் மீண்டும் தினேஷ் அதையே சொல்ல "எதுக்கு பொறுக்கின்ன?" எனக் கேட்டு அருகில் இருந்த சோபாவை எட்டி உடைத்து அது போல தான் உனக்கும் நடக்கும் என மிரட்டுகிறார் விஷ்ணு. 

ஆனால் தினேஷ் அது எதையுமே காதில் வாங்கவில்லை. "ப்ரோமோவில் கன்டென்ட் வரவேண்டும் என்பதற்காகவே அங்க இங்க போய் பொறுக்குறது, இங்க காதுல பொறுக்குறது, அங்க காதுல பொறுக்குறது" என விஷ்ணுவை பங்கப்படுத்த "போதும் போயா  உன்ன பத்தி எனக்கு தெரியும் போயா" என விஷ்ணு தினேஷை பார்த்து சொல்ல "என்ன தெரியும் உனக்கு? என்ன தெரியும் உனக்கு? சிரிச்சுக்கிட்டு தானே பேசுறேன். நான் சீரியஸான ஆளு" என எகிறுகிறார் தினேஷ். மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் நம்ம சமாதானத்துக்கு போன சின்னாபின்னமாகிவிடுவோம் என அமைதியாக ஒன்றும் புரியாமல் இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். 

பல வாரங்களுக்கு பிறகு தரமான ஒரு தெறிக்கவிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது என பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த சீக்ரெட் டாஸ்க் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். 

 

அமுல் பேபி, ப்ரோமோ பொறுக்கி என தினேஷ் திட்ட,இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத விற்று இந்த சண்டையால் பயங்கரமாக ட்ரிகர்ராகி உள்ளார். இந்த கன்டெட்டால் இன்றைய எபிசோட் பயங்கரமாக களைகட்ட போகிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடுகிறார் பிக்பாஸ்!

 

Published at: 15 Nov 2023 01:10 PM (IST)
Tags: vishnu Promo 2 Bigg Boss 7 Tamil bigg boss 7 day 45 dhinesh
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • பிக் பாஸ் தமிழ்
  • Bigg Boss 7 Tamil: விஷ்ணுவை கெட்ட வார்த்தை பேசி ட்ரிகர் செய்த தினேஷ்.. கலவரமான பிக்பாஸ் வீடு..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.